தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மைக்கேல்பட்டி மாணவி மரணத்தை திசை திருப்பிய சங்பரிவார் அமைப்புகளை கண்டித்து மாதர்கள் பிரச்சாரம்

7 Mar 2026, 2:36 pm
மைக்கேல்பட்டி மாணவி மரணத்தை திசை திருப்பிய சங்பரிவார் அமைப்புகளை கண்டித்து மாதர்கள் பிரச்சாரம்
<p><strong>மைக்கேல்பட்டி மாணவி மரணத்தை திசை திருப்பிய சங்பரிவார் அமைப்புகளை கண்டித்து மாதர்கள் பிரச்சாரம்</strong></p> <p>தஞ்சாவூர், மார்ச் 7 - &nbsp;தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் பள்ளி மாணவி லாவண்யாவின் துர திர்ஷ்டவசமான மரணத்தைத் தொடர்ந்து, அதனை மத மோதலாக மாற்ற முயன்ற சங்பரிவார் அமைப்புகளின் சதியை அம்பலப்படுத்தும் வகையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் &nbsp;தீவிர மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. ​திட்டமிட்ட பொய் பரப்புரை கடந்த 2022 ஆம் ஆண்டு மாணவி லாவண்யாவின் தற் கொலைக்குக் கட்டாய மதமாற் றமே காரணம் என ஒரு போலி யான காணொலியைப் பரப்பி, &nbsp;அப்போதைய பாஜக தலைவர் அண்ணாமலை, சங்பரிவார் மற்றும் இந்துத்துவ அமைப் புகள் தமிழகம் முழுவதும் பதற்றத்தை உருவாக்க முயன் றன. கல்வி நிறுவனங்களுக் குள் மத ரீதியான பிளவை ஏற்படுத்தவும், மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரக் கோரியும் இந்தச் சோகமான சம்பவத்தை அவர்கள் அர சியல் கருவியாகப் பயன் படுத்தினர். ​ஆனால், வழக்கின் விசா ரணையில் மாணவியின் மர ணத்திற்குப் பின்னால் குடும்பப் &nbsp;பின்னணி மற்றும் விடுதி &nbsp;சார்ந்த வேறு சில காரணங் களே முதன்மையாக இருந்தன &nbsp;என்பது தெரியவந்தது. அரசி யல் ஆதாயத்திற்காக ஒரு சிறுமியின் மரணத்தை மதச் &nbsp;சாயமிட்டுத் திசைதிருப்பிய வர்களின் செயலை மக்கள் &nbsp;மத்தியில் அம்பலப்படுத்து வதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். இதனை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம், மைக் கேல்பட்டி மற்றும் திருக்காட்டுப் பள்ளி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் கடந்த மார்ச் 4 அன்று &ldquo;மதவெறி சக்திகளைத் தனி மைப்படுத்துவோம்&rdquo; என்ற &nbsp;முழக்கத்தோடு துண்டுப் பிர சுரம் விநியோகிக்கப்பட்டது. மக்கள் சந்திப்பு இயக்கத் தில் மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கலைச்செல்வி, மாநிலச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.கலைச்செல்வி, &nbsp;மாவட்டக் குழு உறுப்பினர் கே. சிந்து பாரதி மற்றும்நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.