பாலின சமத்துவத்தை கல்வித் திட்ட பாடமாக்க போராட்டத்தில் வலியுறுத்திய மாதர் சங்கம்
13 Nov 2025, 3:30 pm
<p><strong>பாலின சமத்துவத்தை கல்வித் திட்ட பாடமாக்க போராட்டத்தில் வலியுறுத்திய மாதர் சங்கம்</strong></p>
<p>உடுமலை,நவ.13- இளம் தலைமுறையினர் பாலின சமத்துவத்தை மாணவ பருவத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் பாலி யல் கல்வியை கற்பிக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிறுத்தி புதனன்று உடுமலை நக ராட்சி அலுவலகம் முன்பு அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர். மாதர் சங்கத்தின் உடுமலை நகர துணைத்தலைவர் மாலினி தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில், பெண்கள் மீதான பாலியல் வன் கொடுமைகளை தடுக்க வேண்டும். கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்ற வாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டும். இரவு நேரங்களில் காவல் துறை ரோந்து செல்வதையும், கண்கா ணிப்பையும் அதிகப்படுத்த வேண்டும். போதை கலாச்சாரத்திற்கு எதிராக பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரச் சாரத்தை அதிகப்படுத்த வேண்டும். சட் டவிரோத போதைப் பொருட்கள் விற் பனை செய்பவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். பாலின சமத் துவம் குறித்த கல்வியை பாடமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பானுமதி, மாநிலக்குழு உறுப்பினர் சித்ரா, மாவட்ட துணைச் செயலாளர் செல்வி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும் சங்கத்தின் உடுமலை நிர்வாகி கள் வசந்தி, சசிகலா, பிஎஸ்என்எல் ராணி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் திலகவதி நன்றி கூறினார்.</p>
<p> </p>
