தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சமையல் எரிவாயு விலை உயர்வைத் திரும்பப் பெற மாதர் சங்கம் வலியுறுத்தல்

10 Mar 2026, 3:51 pm
சமையல் எரிவாயு விலை உயர்வைத் திரும்பப் பெற மாதர் சங்கம் வலியுறுத்தல்
<p><strong>சமையல் எரிவாயு விலை உயர்வைத் திரும்பப் பெற மாதர் சங்கம் வலியுறுத்தல்</strong></p> <p>திருப்பூர், மார்ச் 10- சமையல் எரிவாயு சிலிண்டர் விலை &nbsp;உயர்வை ஒன்றிய மோடி அரசு உடனடியாக &nbsp;திரும்பப் பெற வேண்டும் என அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் திங்க ளன்று தொடங்கியது. மாதர் சங்க மாநிலத் &nbsp;தலைவர் ஜி.பிரமிளா தலைமை வகித்தார். அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி &nbsp;அரசியல் சூழல்களை விளக்கிப் பேசினார். மாநிலப் பொதுச் செயலாளர் அ.ராதிகா, மாநிலப் பொருளாளர் ஜி.ராணி, மத்தியக் குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, எஸ்.கே.பொன்னுத்தாய், சசிகலா, லட்சுமி உட்பட மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து &nbsp;கொண்டனர். &nbsp;ஒன்றிய பாஜக அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் நடவடிக்கை. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலைவாய்ப்பு நெருக்கடி, வருமான &nbsp;குறைவு போன்ற காரணங்களால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்வு &nbsp;குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் சுமையாக மாற்றியுள்ளது. சமையல் எரிவாயு என்பது பொதுமக்க ளின் அத்தியாவசிய தேவையாகும். குறிப் பாக பெண்கள் தலைமையிலான குடும்பங் கள், கிராமப்புற ஏழை மக்கள், குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் ஆகி யோருக்கு எரிவாயு விலை உயர்வு மிகப்பெ ரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒன்றிய அரசு மானியங்களை படிப்படியாகக் குறைத்து, முற்றிலும் சுருக்கி வருகிறது. &nbsp;சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த காலங்களிலும்கூட, அதன் பயனை மக்களுக்கு வழங்காமல் எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை பாதுகாக்கும் நோக்கில் ஒன்றிய அரசு செயல்பட்டது. மக்களின் நலனை விட கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தை முன் னிறுத்தும் இந்த கொள்கை கடுமையாக &nbsp;கண்டிக்கத்தக்கது. எனவே, சமையல் எரி வாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப் &nbsp;பெற வேண்டும். &nbsp;பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சமையல் எரிவாயு மானியத்தை முழு மையாக மீண்டும் வழங்க வேண்டும். ஏழை &nbsp;மற்றும் நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் &nbsp;சமையல் எரிவாயு கிடைக்க உறுதி செய்ய &nbsp;வேண்டும். எரிபொருள் விலைகளை கட்டுப் படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றபட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.