அரசு மருத்துவமனைக்கு மருத்துவர் நியமிக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்
16 Nov 2025, 3:30 pm
<p><strong>அரசு மருத்துவமனைக்கு மருத்துவர் நியமிக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்</strong></p>
<p>ஈரோடு, நவ. 16- சத்தி அருகே கொமராபாளையம் அரசு மருத்துவமனையில் தேவையான மருத்துவர் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சக்தி ஒன் றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சத்தியமங்கலம் ஒன்றிய முதல் மாநாடு சத்தியில் ஞாயிறன்று நடைபெற்றது. ஆர்.தமிழ்செல்வி தலைமை வகித்தார். சங்கத்தின் கொடியை எஸ்.மல்லிகா ஏற்றி வைத் தார். மாவட்டத் துணைத் தலைவர் பி. லலிதா மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.மாரப்பன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோபி திட்டக் குழு செயலா ளர் கே.பாண்டியன், தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் சத்தி தாலுகா செயலா ளர் பி.வாசுதேவன், மாற்றுத்திற னாளிகள் சங்க சத்தி ஒன்றிய செயலா ளர் எஸ்.ஏ.ராம்தாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில், சத்தி, கே.என்.பாளையத் தில் அங்கன்வாடி, சுடுகாடு மற்றும் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும். உக்கரம் பகுதியில் தெரு விளக்கு, தார் சாலை மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். கொமராபா ளையத்தில் அரசு மருத்துவமனையில் தேவையான மருத்துவர்கள், செவிலி யர்கள் நியமிக்க வேண்டும். சத்தி சுகா தார மையத்தில் தேவைக்கேற்ப மருந்து கள் கிடைக்க ஆவணம் செய்ய வேண் டும். காளியூர் பகுதியில் வீடுகள் மீது செல்லும் மின்கம்பிகளை மாற்றிய மைக்க வேண்டும். தண்ணீர் பள்ளம் பகு தியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வச திகள் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள்: மாநாட்டில் 11 பேர் கொண்ட ஒன்றிய குழு அமைக்கப்பட்டது. தலைவராக ஆர்.தமிழ்செல்வி, துணைத் தலைவ ராக மல்லிகா, செயலாளராக கார்த் திகா, துணைச் செயலாளராக டி.பாப் பாத்தி, பொருளாளராக விஜயா ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் ஜெ.அருந்ததி நிறை உரையாற்றினார். முடிவில் கார்த் திகா நன்றி கூறினார்.</p>
