செவிலியர்கள் போராட்டத்திற்கு மாதர் சங்கம் ஆதரவு
22 Dec 2025, 4:47 am
<p>கிருஷ்ணகிரி, டிச.22 - தமிழ்நாடு அரசு கொடுத்த வாக்குறுதி படி செவிலியர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி சென்னையில் நடை பெறும் போராட்டத்தை ஒட்டி தமிழகம் முழுதும் அரசு செவிலியர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. . அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.எம்.ராதாv, பொருளாளர் கவிமணிதேவி,மாவட்ட குழு உறுப்பினர் புனிதா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மகளிர் துணை குழு ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பிகா 3 நாட்கள் கலந்து கொண்டனர்.</p>
