தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நியாய விலைக் கடையில் பழைய முறையில் பொருட்கள் வழங்க மாதர் சங்கம் போராட்டம்

12 Nov 2025, 3:20 pm
நியாய விலைக் கடையில் பழைய முறையில் பொருட்கள் வழங்க மாதர் சங்கம் போராட்டம்
<p><strong>நியாய விலைக் கடையில் பழைய முறையில் பொருட்கள் வழங்க மாதர் சங்கம் போராட்டம்</strong></p> <p>அவிநாசி, நவ.12- நியாய விலை கடையில் பழைய முறையில் பொருட்கள் வழங்கக் கோரி &nbsp;வடுகபாளையம் நியாய விலைக் கடை &nbsp;முன்பு புதனன்று மாதர் சங்கத்தினர் கண் டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அவிநாசி ஒன்றியம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் கைரேகை, கருவிழி மூலம் பொருட்கள் வழங்குவதும், ப்ளூடூத் முறையில் பொருட்களை எடை போடுவதும், ஒரு &nbsp;அட்டைக்கு குறைந்தது 15 நிமிடத்திற்கு &nbsp;மேல் ஆகிறது. இதனால், மக்களுக்கு &nbsp;பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்படுத்து கிறது. இதனால் கிராமப்புறங்களில் வாழும் பொதுமக்கள், பொருட்கள் வாங்க காலை வந்தால் மாலை வரை காத்திருந்து பொருட்கள் வாங்கும் நிலை உள்ளது. இது ஏழை, எளிய மக்க ளுக்கு கடும் சுமையாக உள்ளது. குறிப் பாக பெண்களின் ஒரு நாள் வேலையை யும், வருமானத்தையும் இழந்து நியாய &nbsp;விலைக் கடை பொருட்கள் வாங்க வேண் டிய சூழ்நிலை உள்ளது. மேலும் வயதா னவர்களுக்கு கைரேகை விழாமலும், &nbsp;கருவிழி பதிவாகாமல் திருப்பி அனுப்பி விடுவதால் மன உளைச்சலுக்குள்ளா கின்றனர். எனவே கைரேகை, கருவிழி மூலம் பொருட்கள் வழங்குவதையும், ப்ளூடூத் முறையில் பொருட்கள் எடை போடுவதையும், மாற்றி ஓடிபி மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் &nbsp;எஸ்.கௌரிமணி தலைமையில் வடுக பாளையம் நியாய விலை கடை முன்பு &nbsp;ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தின் ஒன்றிய துணைச் செயலாளர் வி. தேவி, விசைத்தறி தொழிலாளர் சங்க &nbsp;மாவட்டச் செயலாளர் ஆர்.பழனிச்சாமி, &nbsp;விவசாய சங்க ஒன்றியப் பொருளாளர் &nbsp;பி.குமாரசாமி, ஒன்றிய துணைத் தலை வர் என்.கருப்புசாமி, மாணவர் சங்க ஒன் றிய துணைச் செயலாளர் எஸ்.மகேந்தி ரன், வாலிபர் சங்க ஒன்றிய கமிட்டி உறுப் பினர் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.