முந்தய பக்கம்

அடிப்படை வசதிகள் கேட்டு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

17 Nov 2025, 4:40 pm
அடிப்படை வசதிகள் கேட்டு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
<p><strong>அடிப்படை வசதிகள் கேட்டு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>நாமக்கல், நவ.17- காவிரி குடிநீர் உள்ளிட்ட அடிப்படை &nbsp;வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என &nbsp;வலியுறுத்தி கபிலர்மலை ஊராட்சி ஒன் றிய அலுவலகம் முன்பு மாதர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பெருங்கு றிச்சி சிற்றுராட்சி, செய்யாம்பாளையம் பகுதி மக்களுக்கு காவிரி குடிநீர் விநி யோகிக்க வேண்டும். முறையாக செயல்படாத மேல்நிலை குடிநீர் தொட்டி ஆப்ரேட்டரை இடமாற்றம் செய்ய வேண்டும். ஆழ்துளை கிணற் றுக்கு புதிய மின் மோட்டார் பொருத்த &nbsp;வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை &nbsp;வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக &nbsp;மாதர் சங்கத்தினர் திங்களன்று கபிலர் மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.ராணி &nbsp;தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி &nbsp;மாவட்டச் செயலாளர் கி.தங்கமணி வாழ்த்திப் பேசினார். கோரிக்கைகளை விளக்கி சங்க மாவட்டச் செயலாளர் எம்.செல்வராணி பேசினார். பூங்கொடி நன்றி கூறினார். இதன்பின் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று, கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி மனு அளித்தனர். அதன்பேரில் செவ்வா யன்று (இன்று) முதல் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். முறையாக &nbsp;செயல்படாத குடிநீர் தொட்டி ஆப்ரேட் டரை இடமாற்றம் செய்திடவும், பழு தடைந்த ஆழ்துளை கிணற்றுக்கு புதிய &nbsp;மின் மோட்டர் பொருத்தித் தரவும் அதி காரிகள் தரப்பில் உத்திரவாதம் அளிக் கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram