தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

29 Mar 2026, 3:34 pm
சென்னை விரைவு செய்திகள்

சம வேலை சம ஊதியம் வழங்க வேண்டும்  காவேரிப்பட்டினத்தில் மாதர் சங்கம் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, மார்ச் 29-  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் காவேரிப்பட்டினம் வட்டக் குழு சார்பில் உலக மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் சகோதரி எஸ்.கவிதா மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.புனிதா தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் டி.எம்.ராதா மகளிர் தினம் குறித்த கருத்துரையாற்றினார்.  வட்ட நிர்வாகிகள் பட்டம்மாள், பூங்கொடி,மகாலட்சுமி,சத்யா, தனலட் சுமி,புவனேஸ்வரி, ரம்யா உள்ளிட்ட ஏராள மான பெண்கள் கலந்து கொண்டனர்.  மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்த வுடன்,100 நாள் வேலையை 200 நாட்க ளாகவும் கூலியை 600 ரூபாயாகவும் வழங்க  வேண்டும், மாற்றுத்திறனாளிகள் அனைவரு க்கும் கட்டாயம் 100 நாள் வேலையும்,முழு கூலியும் அரைநாள் பணியும் வழங்க வேண்டும்,ஒன்றிய மோடி அரசு வீட்டு எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்திட உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்,பெண்கள் குழந்தைகள் மாணவி கள் மீது நடத்தப்படும் குடும்ப பாலியல் வன்முறைகளை தடுத்திட ஒன்றிய,மாநில அரசுகள் கடுமையான சட்டங்கள் இயற்றிட வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகள் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவில்  கண்டெடுத்த ரூ.74 ஆயிரம் ஒப்படைப்பு!

சென்னை, மார்ச் 29- வில்லிவாக்கம் சிஐடியு ஆட்டோ ஓட்டு நரின் நேர்மை ஆட்டோவில் கண்டெடுத்த ரூ.74 ஆயிரம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலைய சிஐடியு ஆட்டோ நிறுத்தத்தைச் சேர்ந்த ஓட்டு நர் யூ.விஜயகுமார், தனது நேர்மையால் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். கடந்த மார்ச் 25-ஆம் தேதி இரவு தனது ஆட்டோவைச் சுத்தம் செய்தபோது, பின் இருக்கையில் தவறவிடப்பட்டிருந்த பையில் ரூ.74ஆயிரம்  ரொக்கப் பணம் இருப்பதைக் கண்டார். உடனடியாக இது குறித்து நிறுத்தத்தின் தலைவர் ஆர். ராமுவிடம் தகவல் தெரி வித்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் முன்னிலையில் அந்தப் பணத்தை விஜயகுமார் நேர்மையுடன் ஒப்ப டைத்தார். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் போது, ஆட்டோ-டாக்சி தொழிலாளர் சங்கப் பகுதி செயலாளர் என்.சி. ஆப்ரகாம் தாமஸ் மற்றும் பகுதி துணைத்தலைவர் பி. ராஜேந்தி ரன் ஆகியோர் உடனிருந்தனர். வறுமையி லும் பிறர் உடைமைக்கு ஆசைப்படாத ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமாரின் இந்தச்  செயல் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானிய மொழி,கலாச்சாரப் பயிற்சி சென்னை,மார்ச் 29- இந்தோ-ஜப்பான் வர்த் தக மற்றும் தொழில்துறை சபையின் மொழிப் பள்ளி, பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சித் திட்டத் தைத் தொடங்க உள்ளது. 8 முதல் 17 வயது வரையிலான மாணவர்க ளுக்காக வடிவமைக்கப் பட்டுள்ள இந்த 40 மணி நேரப் பயிற்சியில், ஜப்பானிய மொழி பேசுதல், ஓரிகாமி (காகிதக் கலை), ஹைக்கூ கவிதைகள் மற்றும் ஜப்பானிய விளை யாட்டுகள் கற்றுத்தரப்படும். மேலும் விவரங்களுக்கு 044-48556140 / 9884200505 / 7305599874 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.ijcci.com என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் என செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

பேருந்துடன் கார் மோதி தம்பதி உயிரிழப்பு திருவள்ளூர்,மார்ச் 29- சென்னை- திருவள் ளூர் நெடுஞ்சாலையில் செவ்வாப்பேட்டை அருகே கடந்த வெள்ளிக்கிழமை மாநகர பேருந்து மீது கார் மோதிய விபத்தில் முதியவர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர். வேப்பம்பட்டு, பாலாஜி நகரைச் சேர்ந்த ரவிச் சந்திரன் (65) மற்றும் அவரது மனைவி கீதா (65) ஆகி யோர் விபத்தில் பலியான வர்கள். காரை ஓட்டிச் சென்ற  ரவிச்சந்திரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த பேருந்து மீது மோதியதாகக் காவல்துறையினர் சந்தேகிக் கின்றனர். இவ்விபத்தில் காரில் இருந்த ரவிச்சந்திரனின் இரண்டு பேத்திகள் லேசான காயங்களுடன் தப்பினர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணையை மேற் கொண்டு வருகின்றனர்.

பெண்ணிடம் 5 சவரன் சங்கிலி பறிப்பு திருவள்ளூர்,மார்ச் 29-  திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டையில் முகவரி கேட்பது போல நடித்து, 74 வயது மூதாட்டி யிடம் 5 சவரன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். பெருமாள்பட்டைச் சேர்ந்த கஜலட்சுமி (74) என்ப வரிடம், மோட்டார் சைக்கி ளில் வந்த அடையாளம் தெரி யாத இருவர் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள அவரது தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞர் கொலை வழக்கு: 5 பேருக்கு ஆயுள்  சென்னை, மார்ச் 29- வியாசர்பாடியில் கடந்த  2019-ஆம் ஆண்டு கோகுல் நாத் (19) என்ற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப் பட்ட வழக்கில், பிரவீன் குமார், சந்திரசேகர் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு  நீதிமன்றம் தீர்ப்பளித்துள் ளது. டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட முன்விரோதம் கார ணமாக இந்த கொலை நடந்த நிலையில், குற்றம் சாட்டப் பட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா 2,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஆர். ராஜ்குமார் உத்தரவிட்டார்.

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி 40 கி.மீ  பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு,மார்ச் 29- செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய, சனிக்கிழமை அன்று சுமார் 10,000 பேர் பங்கேற்ற 40 கிலோமீட்டர் நீள விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாணவர்கள், சுய உதவிக்குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இப்பேரணி மிதிவண்டி, இருசக்கர வாகனம், கார் மற்றும் பேருந்துகள் வழியாகச் சென்று, இறுதியாக மாமல்லபுரத்தில் மீன்பிடி படகுகள் மூலம் கடல்வழியாக நிறைவடைந்தது. மாவட்ட தேர்தல்அலுவலர்   ச.மாலதி ஹெலன் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில், படூர் மற்றும் கேளம்பாக்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாமல்லபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட முதல்முறை வாக்காளர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பட்டங்களைப் பறக்கவிட்டும், கடற்கரை மணலில் சிற்பங்கள் செதுக்கியும் வாக்களிப்ப தன் அவசியத்தை வலியுறுத்தினர்.

தேர்தல் பயிற்சிக்கு வராத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை  கிருஷ்ணகிரி,மார்ச் 29-  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் 10,040 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை நடை பெற்றன. ஓசூர் மற்றும் சூளகிரியில் நடைபெற்ற பயிற்சி யைப் பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் குமார், உரிய காரணமின்றிப் பயிற்சியில் பங்கேற்காத பணி யாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும், மருத்துவக் காரணங்களுக்காக விலக்கு கோருவோர் அரசு மருத்துவக் குழுவின் நேரடி விசாரணைக்குப் பிறகே பரிசீ லிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது ஓசூர் மாநகராட்சி ஆணையர் முகம்மது ஷபீர் ஆலம், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆக்ரிதி சேத்தி, கீதா ராணி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.'

விழுப்புரத்தில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு: விழுப்புரம்,மார்ச் 29- சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் சிறுவர் பூங்காவில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தோட்டக் கலைத்துறை சார்பில் காய்கறிகள் மற்றும் பழங்களால் விழிப்புணர்வு அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.இந்த அரங் கினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் திறந்து வைத்தார்.

குடிநீர் வால்வு பழுது: ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விழுப்புரம், மார்ச் 29- விழுப்புரம் மாவட்டம் தணிக்கலாம்பட்டு ஊராட்சியில் குடிநீர் குழாய் வால்வு பழுதா னதால், கடந்த மூன்று நாட்களாக பொது மக்கள் குடிநீரின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கண்டாச்சிபுரம் வட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தணிக்க லாம்பட்டு ஊராட்சியின் 5 மற்றும் 6-வது  வார்டுகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசிக்கின்றன. இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழாயின் ‘கேட் வால்வு’ கடந்த 27-ஆம் தேதி பழுதானது. இதனால் அப்பகுதிக்கு மூன்று நாட்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சித் தலைவர் மற்றும்  செயலாளரிடம் புகார் அளித்தும், இதுவரை பழுதை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதி காரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது டன், தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.