முந்தய பக்கம்

பட்டா கேட்டு மாதர் சங்கத்தினர் முறையீடு

10 Dec 2025, 4:08 pm
பட்டா கேட்டு மாதர் சங்கத்தினர் முறையீடு
<p><strong>பட்டா கேட்டு மாதர் சங்கத்தினர் முறையீடு</strong></p> <p>ஈரோடு, டிச.10- ஈரோடு மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் &nbsp;சங்கத்தின் சார்பில் வீட்டுமனை பட்டா கேட்டு வட்டாட்சியர்க ளிடம் முறையிடப்பட்டது. மனித உரிமை தினமான டிச.10 ஆம் தேதியன்று, &lsquo;கண்ணி யமான வாழ்க்கைக்கு சொந்த வீடு, வீட்டு மனை பெறுவது&rsquo; &nbsp;மாதர் சங்கத்தின் சார்பில் முழக்கம் எழுப்பப்பட்டது. அதன்படி &nbsp;பவானிசாகர் பகுதியில் உள்ள கூலிஸ்லைன் பகுதியில் 18 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. அணை கட்டுமான பணிகளில் பங்கேற்ற இத்தொழிலாளர்களில் பல ருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் 18 பேர் விடு பட்டுள்ளனர். இதுகுறித்து பலமுறை மனு கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. &nbsp;எனவே வட்டாட்சியரை சந்தித்து பேசுவது என்ற அடிப் படையில் மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கீதா, துணைத் தலைவர் பா.லலிதா, செயலாளர் ஜெ.அருந்ததி, பொருளா ளர் எஸ்.மல்லிகா ஆகியோர் சத்தியமங்கலம் வட்டாட்சி யரை நேரில் சந்தித்து கேட்டனர். கோப்பு வருவாய் ஆய் வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகப் பதில் வந்தது. ஆனால், &nbsp;வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலிருந்து எந்த பதிலும் வர வில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல, கோபி வட்டத்திற்குட்படட காசிபாளையம், காந்திநகர் பகுதியில் பட்டா கொடுத்து 12 ஆண்டுகள் கடந் துள்ள நிலையில், இடம் அளவீடு செய்து அத்து காட்டப்பட வில்லை. இதுகுறித்தும் வட்டாட்சியரிடம் முறையிடப்பட் டது. அடுத்த சில நாட்களில் பணிகள் நடைபெறும் எனக் கூறப் பட்டுள்ளது. குறிப்பிட்ட தினங்களுக்குள் பணிகள் முழுமை யடையவில்லை எனில் போராட்டம் தவிர்க்க முடியாது என &nbsp;சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram