கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
17 Mar 2026, 3:26 pm

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மாமியார்: பாதிக்கப்பட்ட பெண் புகார்

சேலம், மார்ச் 17- சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் திங்களன்று, காமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சொர்ணா (26) என்பவர் தனது 5 வயது மகனுடன் வந்து கண்ணீர் மல்க புகார் மனு ஒன்றை பெட்டியில் போட்டார். இதுகுறித்து செய்தியாளர்கள் விசாரித் ததில், கடந்த 2020-ம் ஆண்டு சொர்ணா விற்கும் சக்கரவர்த்தி என்பவருக்கும் திரு மணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது பெண்ணின் தந்தை 30 பவுன் நகை மற் றும் சீர்வரிசைகளை வழங்கியுள்ளார். நன் றாகச் சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், கணவர் சக்கரவர்த்திக்கு வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் விரிசலை ஏற்படுத்தியது. இதுகுறித்து தட்டிக் கேட்ட மனைவியை பிரிய நினைத்த சக்கர வர்த்தி, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அவர் சுமத் திய புகார்களில் உண்மையில்லை எனக் கூறி, 2025 அக்டோபரில் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு கணவர் வீட்டிற்குச் சென்ற சொர்ணாவை, அவரது மாமியார் பிரேமா வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பெற் றோர் இல்லாத நிலையில் தவித்த சொர் ணாவை, மாமியார் தகாத வார்த்தைகளால் பேசி, கடுமையாகத் தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இதுகுறித்து சூரமங் கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. தனக்கு வேறு புகலிடம் இல்லை, எனது கணவருடன் சேர்ந்து வாழவே விரும்பு கிறேன். வரதட்சணை கேட்டு தாக்கிய மாமி யார் மீது நடவடிக்கை எடுத்து, என்னை எனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும்” என புகார் அளித்துள்ளார்.

மிளகு விளைச்சல் அதிகரிப்பு: அறுவடை பணியில் தொழிலாளர்கள்

கோவை, மார்ச் 17- வால்பாறையில் பிரபல டாட்டா கம்பெனிக்கு சொந்தமான பகுதியில் மிளகு விளைச்சல் அதிக அள வில் உள்ளதால் அறுவடை பணி தீவிர படுத்தப்பட்டுள் ளது. கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் பணப் பயிர் என்று அழைக்கப்படுகின்ற மிளகு, காப்பி ஏலம் உள்ளிட்ட பணப்பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படு கின்றன. இந்நிலையில் செவ்வாயன்று டாடா காபிக்கு சொந்தமான வரட்டுப்பாறை மற்றும் வில்லோணி எஸ்டேட் பகுதியில் தற்போது மிளகு உற்பத்தி அதிக அளவில் விளைந்துள்ள நிலையில், மரங்களில் ஏறி பறிக்க வேண்டிய ஒரு நிலைப்பாடு உள்ளது. இதனால், தற்போது அங்குள்ள அசாம், ஜார்கண்ட் உள்ளிட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வைத்து அவர்க ளுக்கு தலைக்கவசம் மற்றும் மரத்தில் ஏறுவதற்கான ஏணி பாதுகாப்பு உபகரணங்களுடன் மிளகு பறிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. தற்போது மிளகு ஒரு கிலோ விலை 400 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது வால்பாறை பகுதி யில் காப்பி, மிளகு ஏலம் உள்ளிட்ட பயிர்கள் உற் பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குரங்குகளை பாதுகாக்க தொங்கும் பாலங்கள்

கோவை, மார்ச் 17- வால்பாறையில் அரிய வகை சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க தொங்கும் பாலங் கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை ஆனை மலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மானாம் பள்ளி மற்றும் வால்பாறை ஆகிய வனச்சரகப் பகுதிகளில் அரிய வகை வனவிலங்கு களை பாதுகாக்கும் பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியா விலேயே வால்பாறை பகுதியில் மட்டுமே அதிக அளவில் வசித்து வரும் சிங்கவால் குரங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறை தற்போது முக்கிய நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளது. கோவை மாவட்ட வனத்துறை இணை இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, வால் பாறை வனச்சரகர்கள் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் சசிதரன் ஆகியோர் முன்னிலையில் இதற்கான பணிகள் நடைபெற்று வரு கின்றன. வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், சாலை ஓரங்களில் சிங்கவால் குரங்குகள் மற்றும் வெள்ளை நிறக் குரங்கு கள் அடிக்கடி உலா வருகின்றன. இவை சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் நிலவி வந்தது. இதனை தவிர்க்கும் பொருட்டு, வரட்டுப்பாறை, குரங்கு முடி மற்றும் புதுத் தோட்டம் உள்ளிட்ட அடர்ந்த சோலை வனப் பகுதிகளில் குரங்குகள் சாலையை கடக்க தொங்கும் பாலங்கள் தற்போது வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாலங்கள் மூலம், குரங்குகள் தரைப் பகுதிக்கு வராமல் மரங்களுக்கு இடையே பாதுகாப்பாகச் செல்ல வழிவகை செய் யப்பட்டுள்ளது. குரங்குகளின் வாழ்வாதாரத்தைப் பாது காக்கும் நோக்கில் வனத்துறையினர் இப் பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியி லும் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையின் இந்த உடனடி புனரமைப்பு நடவடிக்கை காரணமாக, சாலை விபத்துகளில் சிக்கி அரிய வகை குரங்குகள் உயிரிழப்பது இனி பெருமளவு தவிர்க்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

புதர் மண்டி காணப்படும் குடியிருப்புகள்

தருமபுரி, மார்ச் 17- கம்பைநல்லூர் அருகே உள்ள கே.ஈச்சம் பாடி அணைக்கட்டு திட்ட குடியிருப்புகள் புதர் மண்டி காணப்படுவதால், உடனடியாக சீர மைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கம்பைநல்லூர் அருகே உள்ள கே.ஈச்சம்பாடி யில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தென் பெண்ணையாற்றின் குறுக்கே பொதுப் பணித்துறை சார்பில் அணைக்கட்டு கட்டும் பணி தொடங்கப்பட்டது. அப்போது, அந்த பணியில் ஈடுபடுபவர்களுக்காக அலுவலகம் மற்றும் 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டது. அணைக்கட்டும் பணிகள் முடிவடைந்தவுடன், அங்கு குடியிருந்தவர் கள் காலி செய்து சென்றபின் அந்த குடியி ருப்பு, அலுவலகம் ஆகியவை புதர் மண்டி காணப்படுகிறது. குடியிருப்பதற்கு வீடுக ளின்றி மக்கள் தவித்து வரும் நிலையில், இது போல் பாழடைந்து காணப்படும் வீடுகளை சீர மைத்து, ஏழை எளிய பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

ஈரோடு, மார்ச் 17- அந்தியூரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட இருவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் ஏப்.23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த ஞாயிறன்று அறிவித்தது. இதையடுத்து, தேர் தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், ஈரோடு மாவட்டம், அந்தியூர் தேர் வீதியில் ஞாயிறன்று இரவு நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி திருமூா்த்தி தலைமையில், அந்தியூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தப்பட்டதால், இது குறித்து அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் காவல் நிலையத்தில் புகாரளித் தார். அதன்பேரில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி திருமூர்த்தி, அந்தியூா் வேட்பாளர் ஆலங் காட்டூர் ஆனந்தி ஆகியோர் மீது காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாகப்பட்டினம் – கொல்லம் எக்ஸ்பிரஸ்: இரிஞ்சாலகுடா நிலையத்தில் நின்று செல்லும்

சேலம், மார்ச் 17- கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு வழியாக இயக் கப்படும் விசாகப்பட்டினம் – கொல்லம் – விசாகப்பட்டி னம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், கேரளம் மாநிலம் இரிஞ்சாலகுடா (Irinjalakuda) ரயில் நிலையத்தில் பரி சோதனை அடிப்படையில் நின்று செல்ல ரயில்வே வாரி யம் ஒப்புதல் அளித்துள்ளது. திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் ரயில் நிலையங்க ளுக்கு இடையே அமைந்துள்ள இரிஞ்சாலகுடா நிலை யத்தில், பயணிகளின் வசதிக்காக இந்த புதிய நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கால அட்டவணை விபரம் பின்வருமாறு: விசாகப்பட்டினம் – கொல்லம் வாராந்திர எக்ஸ் பிரஸ் (வண்டி எண்: 18567) வரும் மார்ச் 19-ஆம் தேதி முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் போது, வெள்ளிக்கிழமை தோறும் காலை 08.05 மணிக்கு இரிஞ்சாலகுடா நிலையத்திற்கு வந்து 08.06 மணிக்கு அங்கிருந்து புறப்படும். மறுமார்க்கமாக கொல்லம் – விசாகப்பட்டினம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 18568) வரும் மார்ச் 20-ஆம் தேதி முதல் கொல்லத்தில் இருந்து புறப்ப டும் போது, வெள்ளிக்கிழமை தோறும் இரவு 23.54 மணிக்கு இரிஞ்சாலகுடா நிலையத்திற்கு வந்து 23.55 மணிக்கு அங்கிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த ரயிலானது ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை சந்திப்பு வழியாக இயக்கப்படுவதால், மேற்கு மண்டலத்திலிருந்து கேரளா செல்லும் பயணிகளுக்கு இந்த புதிய நிறுத்தம் பயனுள்ளதாக இருக்கும் என சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மாரிய மைக்கேல் தெரி வித்துள்ளார்.

கொட்டியது ’ஆலங்கட்டி’ மழை: விவசாயிகள், பொதுமக்கள் உற்சாகம்!

கோவை, மார்ச் 17- கோவையில் கடந்த சில வாரங்களாகக் வெயில் சுட்டெ ரித்து வந்த நிலையில், புறநகர் பகுதிகளில் பரவலாகப் பெய்த ஆலங்கட்டி மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கோவை புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, விராலியூர், தீத்திபாளையம் ஒத்தக்கால் மண்ட பம், மதுக்கரை, மலுமிச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ் வாயன்று மதியம் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையின் போது சிறிய அளவிலான ஆலங்கட்டிகள் (Hailstones) விழுந்ததைக் கண்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். சாலைகளில் சிதறிக் கிடந்த ஆலங் கட்டிகளைக் கைகளில் ஏந்தி பொதுமக்கள் உற்சாக மடைந்தனர். கடந்த சில நாட்களாக 35 டிகிரி செல்சியஸிற்கு மேல் பதி வாகி வந்த வெயிலால் பயிர்கள் வாடும் நிலையில் இருந் தன. இந்தத் திடீர் மழையினால் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயரும் என்றும், தென்னை மற்றும் காய்கறிப் பயிர்க ளுக்கு இது மிகுந்த நன்மையைத் தரும் என்றும் விவசாயி கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

பின்னலாடைகளின் விலை 7 சதவீதம் உயர்வு

திருப்பூர், மார்ச் 17- பின்னலாடைகளின் விலையை 7 சதவீதம் உயர்த்துவதாக செவ்வாயன்று சைமா அறிவித்துள்ளது. சைமா வளாகத்தில் செவ்வாயன்று சங்கத்தின் தலைவர் பி.சண்முகசுந்தரம் தலைமையில் அவசர ஆலோசனை கூட் டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நூல் விலை, சலவை மற் றும் சாயக் கட்டணம், தையல் நூல் விலை, எலாஸ்டிக் விலை மற்றும் அனைத்து பேக்கிங் பொருட்களின் விலைகள் அபரித மாக உயர்ந்துள்ளது. எனவே அதற்கேற்றவாறு பின்னலாடை களின் விலையை 7 சதவீதம் உயர்த்துவது என அனைத்து முன்னணி பிராண்ட் நிறுவனங்கள் ஒருமனதாக முடிவு செய் யப்பட்டது. இந்த விலை உயர்வு செவ்வாயன்று (இன்று) முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சைமா துணைத்தலைவர் எஸ்.பாலச்சந்தர், செய லாளர் ஆர்.தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

ஏலம் உரிமையை ரத்து செய்யக் கோரி நான்கு நாட்கள் கடையடைப்பு போராட்டம்

திருப்பூர், மார்ச், 17- ஏலம் உரிமையை ரத்து செய்ய கோரி மார்ச் 30 முதல் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை தொடர் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஏப்.2 ஆம் தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ள தாக பூ மார்க்கெட் வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் ஸ்மார்ட் சிட்டி பூ மார்கெட் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் பூக்கள், தினசரி 100 டன்க்கு மேல் வியாபாரம் செய்யப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டியின் கீழ் 87 கடைகள் கட்டப் பட்ட பூ மார்க்கெட் வளாகம் வரும் மார்ச் 31 ஆம் தேதி உடன் குத்தகை காலம் முடிவடைகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் தேர்தலை முன்னிட்டு முன்னதாகவே ஏலம் கொண்டுவரப்பட்டது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட செல் வக்குமார் என்ற நபர் ஆன்லைன் மூலம் ரூ.4 கோடியே 10 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார். இவர் ஏலம் எடுத்த உடன் மாநகராட்சி அனுமதி பெறாமல் மார்கெட்டுக்கு உள்ளே வந்து, வியாபாரிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் பூ மார்க்கெட் வியா பாரிகள் கூட்டமைப்பு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மாமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஏலம் எடுத்த நபரை மாமன்ற உறுப்பினர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில், தற்போது செல்வகுமார் ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.11 லட்சம் வரை முன்பணம் கேட்பதாகவும், வாடகையாக தினசரி ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை கேட்பதாகவும், தராத பட்சத்தில் கடையை வேறு நபருக்கு கொடுத்து விடுவேன் என மிரட்டும் தோரணையில் பேசுவதாக கூறப்படுகிறது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி மார்ச் 30 முதல் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை தொடர் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஏப்.2 ஆம் தேதி உண்ணா விரதம் போராட்டம் நடத்த உள்ளதாக பூ மார்க்கெட் வியாபாரி கள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குட்கா விற்பனை: ஒருவர் கைது

திருப்பூர், மார்ச் 17- வெள்ளக்கோவில் அருகே குட்கா பொருள் விற் பனை செய்த மளிகைக் கடைக்காரர் கைது செய்யப் பட்டார். வெள்ளக்கோவில் அருகே வீரசோழபுரம் பகு தியில் ஞாயிற்றுக்கிழமை காவல் துறையினர் சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள மளி கைக் கடையில் குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைய டுத்து, அதே ஊரைச் சோ்ந்த மளிகைக் கடைக்காரர் ஆனந்தராஜ் (44) கைது செய்யப்பட்டார். அவரிட மிருந்து 7 குட்கா பாக்கெட் கள் பறிமுதல் செய்யப்பட் டன.

விபத்தில் இருவர் உயிரிழப்பு

சேலம், மார்ச் 17- மேட்டூர் அருகே மேச் சேரியில் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் மாவட்டம், மேட் டூர் அருகே மேச்சேரி குதி ரைக்காரனூர் பகுதியை சேர்ந்த பரமசிவம்- ராஜேஸ் வரி தம்பதியினர், உறவி னர்கள் சந்தானம், செந்தில், நவீன் ஆகிய ஐந்து பேரும் காரில் கோவிலுக்கு சென்று விட்டு மேச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தனர். மேச்சேரி பெத்திகிரிபட்டி அருகே கார் வந்தபோது மேட்டூரில் இருந்து மீன் பாரம் ஏற்ற எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதி விபத் துக்குள்ளானது. இந்த விபத் தில் காரில் பயணம் செய்த மேச்சேரியை சேர்ந்த செந் தில்குமார், சங்ககிரியை சேர்ந்த நவின் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொதுமக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோ தனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம டைந்த மூன்று பேர் சிகிச் சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு ஆம்பு லன்ஸ் மூலம் அனுப்பி வைத் தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மேச்சேரி போலீ சார் விபத்துக்குள்ளான லாரி ஓட்டுநர் பூவரசன், கிளினர் கிட்டு ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

கோவையில் அதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாது

புகழேந்தி பேட்டி கோவை, மார்ச் 17- புரட்சி அண்ணா திராவிடர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் புகழேந்தி செவ்வாயன்று கோவையில் செய்தியா ளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந் தித்து தனது கட்சியின் ஆதரவைத் தெரி வித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக குறித்து விமர்ச னங்களை முன்வைத்தார். அதில், ”எடப்பாடி பழனிசாமி ஒரு பச்சைத் துரோகி, அவர் தூக்கி எறியப்பட வேண்டிய நபர். அவர் எவ்வளவுதான் கெஞ்சிக் கூத்தாடி அழைத்தாலும் அவருடன் இணையப் போவ தில்லை. முன்னாட்களில் ஜெயலலிதாவைக் காண போயஸ் தோட்டத்திற்கு பிச்சை எடுக்க வந்தவர்கள், இன்று எடப்பாடியை பிச்சை எடுக்க வைத்துள்ளனர். தில்லியில் இருந்து அவர் பெயரை இன்னும் முதல மைச்சர் வேட்பாளராகக் கூட அறிவிக்க வில்லை. தென் மற்றும் வட தமிழக மக்கள் அவரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”. என்று சாடினார். மேலும், மதவாத சக்திகள் மற்றும் சங்பரி வார் அமைப்புகள் தமிழகத்திற்குள் நுழை வதை தடுக்கவே திமுகவை ஆதரிப்பதாக வும், அதிமுக தயவில், பாஜக முன்னுக்கு வரத் துடித்தாலும், இறுதியில் பல இடங்க ளில் டெபாசிட் இழப்பதே மிஞ்சும். மேலும், கோவையில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்றார்.

தேர்தல் நடத்தை விதிகள்: பொதுக்கூட்டம் ரத்து

ஈரோடு, மார்ச் 17- தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எழுமாத்தூர் பகுதியில் அறிவிக்கப்பட்ட பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட் டம், எழுமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட நிர்வா கம், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவ லர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் வரை மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், எழுமாத் தூர் ஊராட்சி, பொன்விழா நகரில் 24 குடும் பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதில் 19 குடும்பத்தி னருக்கு கலைஞர் கனவு இல்லம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாரச் சந்தை பகுதியில் கழிவுநீர் சாக்கடை சீரமைக் கப்பட்டுள்ளது. மண்கரடு கணபதி நகரில் சின்டெக்ஸ் தொட்டி அமைத்து குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சிவா னந்தா காலனி மற்றும் 60 வேலம்பாளையம் ஊராட்சி, இந்திரா நகர் பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மக்க ளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள் ளது. எனவே, ஊராட்சி முதல் மாவட்ட நிர் வாகம் வரை ஒத்துழைத்த அனைவருக்கும் மொடக்குறிச்சி தாலுகாக்குழு சார்பில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் அறிவிக்கப் பட்டது. எழுமாத்தூர் பேருந்து நிறுத்த பகுதி யில் திங்களன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், செயற் குழு உறுப்பினர் சி.முருகேசன், தாலுகா செயலாளர் ஆகியோர் உரையாற்றுவதாக இருந்தது. ஆனால், சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

சுவர் விளம்பரங்களை அகற்ற வலியுறுத்தல்

உதகை, மார்ச் 17- உதகையில் சாலையோரம் மற்றும் பொது இடங்களிலுள்ள சுவர்களில் எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் தற்போது வரை அழிக்கப்படாமல் உள்ளதால், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக நடை பெறும் என இந்திய தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளதை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத் தின் எல்லைப்பகுதிகளில் உள்ள சோத னைச்சாவடிகள் மற்றும் நகர் பகுதிக ளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வரு கின்றனர். அதேபோல் அரசியல் கட்சி தலைவர்களின் உருவச்சிலைகளும் மறைக்கப்பட்டுள்ளன. மேலும், நகர் பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் சுவர்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அகற்றும் பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில், உதகையில் அதிமுக, தவெக, நாம் தமி ழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் தற்போது வரை அழிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை சுவர்களிலும், உதகை அருகே மூன்றாவது மாற்றுப்பாதையாக அமைந்துள்ள காந்திபேட்டை பகுதியில் சாலையோரம் உள்ள சுவர் களில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங் கள் அழிக்கப்படாமல் உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவித்து மூன்று நாட்களாகியும், மாவட்டத்தின் பல் வேறு இடங்களில் சாலையோரங்களில் எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் தற்போது வரை அழிக்கப்படாமல் உள்ளன. எனவே, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி அரசியல் விளம்பரங் களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந் துள்ளது.