முந்தய பக்கம்

சாலை விபத்தில் தாய், மகள் பலி

9 hours before
சாலை விபத்தில் தாய், மகள் பலி

சாலை விபத்தில் தாய், மகள் பலி

செங்கல்பட்டு, செப். 2-இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கீரப்பாக்கம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). இருவரும் இருசக்கர வாகனத்தில் ஊரப்பாக்கம் நோக்கி வந்தபோது, காரணை புதுச்சேரி கிராமப் பகுதியில் அரசு பேருந்தை முந்த முயன்றுள்ளனர். அப்போது எதிரே வந்த தனியார் பள்ளிப் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியதில், தாய் தேவி சம்பவ இடத்திலேயே பலியானார்.

பலத்த காயமடைந்த சுவாதி, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பள்ளிப் பேருந்து ஓட்டுநரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram