தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

17 Jan 2026, 2:42 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ஆத்தூர் அருகே விபத்து தாய் மற்றும் குழந்தை பலி

சேலம்.ஜன.17- ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் அருகே  நான்கு வழிச்சாலையில் எதிர் திசையில் வேகமாக சென்ற  கார் மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் தாய் மற்றும் மூன்று  வயது மகன் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மனைவி ஜெயப்பிரியா (25), மூன்று வயது குழந்தை தஸ்வின்  மற்றும் மகள் தர்ஷினி  உள்ளிட்டரோடு ஈரோடு நோக்கி  தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம்-  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சேலத்தில்  இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார்  தடுப்புக்கட்டையின் மீது மோதி எதிர் திசையில் சுரேஷ் சென்ற  கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜெயப்பிரியா,  அவரது மூன்று வயது குழந்தை தஸ்வின் ஆகியோர் நிகழ்வு  இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  காயம் அடைந்த சுரேஷ் மற்றும் தர்ஷினி சிகிச்சைக்காக அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஏத் தாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள்

கோவை, ஜன.17- கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான மதுக்கரை, பேரூர் மற்றும் மாதம்பட்டி பகுதிக ளில் கடந்த சில நாட்களாகக் காட்டு யானைகளின் நடமாட்டம்  அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வனப்பகுதியில் இருந்து  உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக இரவு நேரங்களில் யானைகள், அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து  விளைநிலங்களைச் சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி விவ சாயிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இந்நிலை யில், சனியன்று அதிகாலை மதுக்கரை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு ஆண் காட்டு யானைகள் அறி வொளி நகர் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. இது குறித்துத் தகவ லறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை வனத்துறை யினர் இரண்டு யானைகளையும் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து குடியிருப்புப் பகுதிகளில் யானை கள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

கோவை வழியாக நியூ ஜல்பைகுரி - நாகர்கோவில் அமிர்த பாரத் ரயில் இயக்கம்

கோவை, ஜன.17- கோவை வழியாக மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி -  நாகர்கோவில் இடையே புதிய ‘அமிர்த பாரத்’ வாராந்திர விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில்  சேவை மூலம் கோவை மாவட்டத்திலிருந்து வடமாநிலங் களுக்கும், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும் கூடுதல்  ரயில் வசதி ஏற்பட்டுள்ளது. வண்டி எண் 13434 நியூ ஜல்பைகுரி - நாகர்கோவில் அமிர்த  பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், வாரந்தோறும் புதன்கிழமை மாலை  4:45 மணிக்கு நியூ ஜல்பைகுரியில் இருந்து புறப்பட்டு, வெள் ளிக்கிழமை இரவு 11:00 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடை யும். மறுமார்க்கத்தில், வண்டி எண் 13433 நாகர்கோவில் - நியூ  ஜல்பைகுரி அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், ஞாயிற்றுக்கி ழமை இரவு 11:00 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப் பட்டு, புதன்கிழமை அதிகாலை 5:00 மணிக்கு நியூ ஜல்பைகு ரியைச் சென்றடையும். தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், வேலூர்,  மதுரை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங் களை இந்த ரயில் இணைக்கிறது. மேற்கு வங்கம், பீகார்,  ஒடிசா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்க ளைக் கடந்து செல்லும் இந்த ரயில் சேவை, எல்லை யோரப் பகுதிகளையும் தொழில் நகரங்களையும் இணைக் கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ரயில் சேவை மூலம் கோவையிலிருந்து டார்ஜிலிங்,  விசாகப்பட்டினம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும்  பயணிகளுக்கு போக்குவரத்து வசதி எளிதாகும். குறிப்பாக,  தொழில் நகரமான கோவையில் பணிபுரியும் பிற மாநிலத் தொழிலாளர்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் இந்த வாராந் திர ரயில் சேவை பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க் கப்படுகிறது.

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி மீட்பு கோவை, ஜன.17- கோவை மாவட்டம், சூலூர் அடுத்த பீடம்பள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி (50) என்ப வர், வெள்ளியன்று காலை தனது தோட்டத்தில் திடீரென  மண் சரிவு ஏற்பட்டதால் நிலைதடுமாறி கிணற்றுக் குள் விழுந்தார். இதுகுறித்து  தகவல் அறிந்த சூலூர் தீய ணைப்பு துறையினர் தண் ணீரில் தத்தளித்துக் கொண் டிருந்த அவரை மீட்டனர்.  பின்னர் அவர் 108 ஆம்பு லன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேருந்தை நிறுத்தி பெண் தர்ணா

நாமக்கல், ஜன.17- அரசு பேருந்து கை காட்டியும் நிற்காத ஆவேசத்தில் பெண் ஒருவர் பேருந்தை மறிந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரப ரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம், வெப்படை அடுத் துள்ள பாதரை கிராமத்தைச் சேர்ந்தவர் சரிதா. இவர் பள்ளிபாளையம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணி யாற்றி வருகிறார். இந்நிலையில் சனியன்று  அதிகாலை 5:30 பணிக்கு செல்லுவதற்காக பாதரை பேருந்து நிறுத்த பகுதியில் E-5 அரசுப்  பேருந்தை நிறுத்தியுள்ளார். ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்ப டுகிறது. இதனால், உரிய நேரத்திற்கு வேலைக்கு  வர முடியவில்லை என ஆவேசமடைந்த சரிதா ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்த  பொழுது, ஒட்டமெத்தை என்ற பகுதியில்  அரசு பேருந்தை நிறுத்தி தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டார். மேலும் ஓட்டுநர் வெங்க டேசுடன் நீங்கள் வாகனத்தை நிறுத்தாத தால், என்னால் உரிய நேரத்திற்கு பணிக்கு வர  முடியவில்லை எனவும், ஒரே ஒரு ஆள் நின் றால் பேருந்தை நிறுத்த மாட்டீர்களா என,  பேருந்தின் ஓட்டுநருடன் கடும் வாக்குவா தத்தில் ஈடுபட்டார்.  இதன் காரணமாக பின் தொடர்ந்து  வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் போக் குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த பள்ளிபாளையம் போலீ சார் அப்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி  அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.