தாயே, யார் இவர்கள்..?
13 Dec 2025, 1:22 pm
<p><strong>தாயே, யார் இவர்கள்..?</strong></p>
<p>முருகர் பதற்றமாக வருகிறார். பார்வதி - என்ன முருகா, என்ன ஆச்சு.. முருகர் - என்ன இது.. என்னவோ சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறதே.. ஏன் கூச்சல்..? பார்வதி - அவர்கள் உன் பக்தர்கள், முருகா.. முருகர் - பார்த்தால் அப்படித் தெரியவில்லையே.. என்னைத்தேடி பாதயாத்திரையாக வரும் ஒரு முகம் கூட இதில் இல்லை. பார்வதி - இவர்கள் சீசன் பக்தர்கள்.. அடுத்த வருஷம் தேர்தல் வருதில்லையா.. முருகர் - அவர் என்ன கோஷம் போடுகிறார்கள்.. பார்வதி - அதுவா முருகா... நீ மும்மொழி கற்காததன் விளைவு.. பாரத் மாதா கி ஜே... அப்படின்னா, இந்தியத் தாய் வாழ்கனு அர்த்தம்.. முருகர் - அப்போ நீங்கள்.. பார்வதி - நான் உனக்கும், விநாயகனுக்கும்தான்.. முருகர் - உன்னை அன்னை என்று வழிபட மாட்டார்களா..? பார்வதி - உண்மையான பக்தர்கள் செய்வார்கள்... இவர்கள் என்னை வைத்து எங்காவது கலவரம் செய்ய வேண்டும் என்றால், பார்வதி மாதா கி ஜே என்பார்கள். முருகர் - நான் என்ன செய்ய வேண்டும்? பார்வதி - நீ அவர்களுக்கு எதிராக ஏதாவது சொன்னால், அந்த நீதிபதி கடுமையான முடிவு எடுப்பார்.. முருகர் - எனக்கு எதிராகவா? பார்வதி - கார்களை நிறுத்த இடம் போதவில்லை என்று தில்லியில் ஒரு கோவிலை இடித்துத் தள்ளிவிட்டார்கள்.. முருகர் - தாயே, என்ன சொல்கிறீர்கள்..? பார்வதி - அயோத்தியில் அரசியலுக்காக ஒரு கோவில் கட்ட மசூதியை மட்டும் இடிக்கவில்லை.. பல ராமர் கோவில்களையும் அந்த ஊரில் இடித்தார்கள்.. முருகர் - இவர்கள் பக்தர்களா? பார்வதி - அப்படிச் சொல்லிக் கொள்ளும் வன்முறையாளர்கள்.. முருகர் - எப்படி நிறுத்துவது..? பார்வதி - மக்கள்தான் நிறுத்த வைப்பார்கள்.. அங்கே பார்... கடைகளை அடைக்கச் சொல்லி வன்முறையாளர்கள் மிரட்டினார்கள்.. ஆனால், எல்லாம் திறந்திருக்கின்றன.. முருகர் - நல்லது நடக்கட்டும், தாயே.. கற்பனை - கணேஷ்</p>
