மாற்றுத்திறனாளி பெண்ணின் பணத்தை மீட்டு வழங்கக்கோரி மாதர் சங்கம் மனு
19 Nov 2025, 3:33 pm
<p><strong>மாற்றுத்திறனாளி பெண்ணின் பணத்தை மீட்டு வழங்கக்கோரி மாதர் சங்கம் மனு</strong></p>
<p>தருமபுரி, நவ.19- மாற்றுத்திறனாளி பெண்ணின் பணத்தை மீட்டு தரக்கோரி மாதர் சங்கத்தினர் தரும புரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ் வரனிடம் மனு அளித்தனர். தருமபுரி நகரம், காந்திநகரைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மனைவி காஞ்சனா. காது கேளதாவரான இவர், நாட்டான்மைபுரம், பாரதியார் தெருவைச் சேர்ந்த உமாதேவி என்பவருக்கு, குடும்ப தேவைக்காக ரூ.90 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால், இவர் வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். இதுகுறித்து கடந்த அக்.18 ஆம் தேதியன்று தருமபுரி காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக் கப்படவில்லை. எனவே, உடனடியாக விசா ரணை மேற்கொண்டு வாங்கிய பணத்தை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் புதனன்று மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் மனு அளித்தனர். இந்நிகழ்வில், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மல் லிகா, நகரச் செயலாளர் நிர்மலா ராணி, ஒன்றியத் தலைவர் எம்.மீனாட்சி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
