முந்தய பக்கம்

வீட்டு மனைப் பட்டா கோரி மாதர் சங்கம் முறையீடு

8 Dec 2025, 4:39 pm
வீட்டு மனைப் பட்டா கோரி மாதர் சங்கம் முறையீடு
<p><strong>வீட்டு மனைப் பட்டா கோரி மாதர் சங்கம் முறையீடு</strong></p> <p>கோவை, டிச. 8- கோவை மாவட்டத்தில், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மற்றும் வீட்டு மனைப் பட்டா இல்லாத மக்க ளுக்கு, தமிழக அரசு சார் பில் இலவச வீட்டு மனை மற் றும் வீட்டு மனைப் பட்டா &nbsp;வழங்கிடக் கோரி, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திங்க ளன்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித் தனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது: கோவை மாவட்டத்தில் பெரும்பாலான ஏழை, எளிய மக்கள் வீட்டு மனைப் பட்டா இல் லாமல் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வரு கின்றனர். இவர்களது பொருளாதார சூழ் நிலையினைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு இலவச வீட்டு மனைகளை வழங்க வேண்டும். அதேபோல், புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வரும் மக்களுக்கு, &nbsp;அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத் தும் வகையில் உடனடியாக வீட்டு மனைப் &nbsp;பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக் கப்பட்டது. முன்னதாக இந்த மனு அளிக்கும் நிகழ்வில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் &nbsp;சங்கத்தின் மாவட்டத் தலைவர் உஷா, மாநி லக் குழு உறுப்பினர்கள் ராஜலட்சுமி, அமுதா, &nbsp;மாவட்டப் பொருளாளர் தங்கமணி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram