தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாடு

1 hour before
விளையாடு

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

காலிறுதியில் மொரோக்கோ போட்டியை நடத்தும் கனடா வெளியேறியது

23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள் ளிட்ட நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நாக் அவுட் - 16 சுற்று ஆட்டங்கள் இந்திய நேரப் படி சனியன்று நள்ளிரவு தொடங்கியது. இந்நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற முதல் நாக் அவுட் - 16 ஆட்டத்தில் போட்டி யை நடத்தும் கனடா - மொரோக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் தொ டக்கம் நிமிடம் முதலே இரு அணிக ளும் கோலடிக்க தீவிர முயற்சி மேற் கொண்டன. குறிப்பாக கனடா அணி முதல் பாதியில் கோலடிக்க ஆதிக்கம் செலுத்தியது. எனினும் முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் மொராக்கோ அணி தாக்குதலை தீவிரப்படுத்தியது. ஆட்டத்தின் 50ஆவது நிமிடத்தில் அந்த அணியின் நடுகள வீரரான உனாஹி கோலடித்தார். இது பெனால்டி பாக்ஸிற்கு வெளியே அடிக் கப்பட்ட அதிரடி கோலாகும். தொடர்ந்து 82ஆவது நிமிடத்தில் மொரோக்கோ வீரர் பிராஹிம் டயாஸின் அசத்தலான பாஸ் (பந்தை கடத்தி தருதல்) மூலம் உனாஹி மீண்டும் ஒரு கோலடித்தார். முழு ஆட்டநேர உதிரி நிமிடத்தில் (90+8’) பிராஹிம் டயாஸ் கொடுத்த பாஸ் மூலம் ரஹீமி கோலடித்தார். இந்த ஹாட்ரிக் கோல் (அணி) மூலம் மொரோக்கோ காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. உலகக்கோப்பை வர லாற்றில் இரண்டு முறை காலிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆப்பி ரிக்க நாடு என்ற வரலாற்றுப் பெரு மையை மொராக்கோ பெற்றுள்ளது. மொரோக்கோ அணி தனது காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த ஆட்டம் ஜூலை 10 அன்று நடைபெறுகிறது.

கனடா அவுட்

உலகக்கோப்பை போட்டியை நடத் தும் நாடுகளில் ஒன்றான கனடா அணி தொடரில் இருந்து வெளியேறியது. மொராக்கோவை விட இருமடங்கு ஷாட்களை அடித்த போதிலும், மொ ரோக்கோ தனக்கு கிடைத்த 5 வாய்ப்பு களில் 3-ஐ கோலாக மாற்றியது. இது தான் கனடா அணயின் தோல்விக்கு காரணம் ஆகும். குறிப்பாக கனடா அணியின் நட்சத்திர வீரரான அல் போன்சோ டேவிஸ் காயம் காரண மாக இப்போட்டியில் விளையாடாதது அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்க காலணிக்கு 5 வீரர்கள் மல்லுக்கட்டு

கால்பந்து போட்டி களில் உலகக் கோப்பை வெல் வது எவ்வளவு முக்கியமோ? அதே போல தங்ககாலணி (கோல்டன் பூட்) வெல்வதும் மிக முக்கியமானது தான். கடந்த சீசனில் பிரான்ஸ் வீரர் மாப்பே 8 கோல்கள் அடித்து தங்க காலணியை வென்றார்.

இந்நிலையில், நடப்பு சீசனில் தங்க காலணி ரேஸில் 5 வீரர்கள் மல்லுக் கட்டி வருகின்றனர். தற்போதைய நாக் அவுட் - 16 சுற்றில் தங்க காலணி வெல்ல அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி (7 கோல்கள்), பிரான்ஸ் கேப்டன் மாப்பே இடையே கடும் போட்டி நீடித்து வருகிறது. அதே போல இங்கி லாந்து கேப்டன் ஹாரி கேன் (5 கோல்கள்), நார்வே வீரர் எர்லிங் ஹாலாண்ட் (5 கோல்கள்), பிரேசில் வீர்ரர் வினீசியஸ் ஜூனியர் (4 கோல் கள்) என தங்க காலணி ரேஸில் வரி சையாக உள்ளனர். எனினும் கோல டிக்கும் விகிதத்தில் மெஸ்ஸி அதிக வாய்ப்பு உள்ளது என எதிர் பார்க்கப்படுகிறது.

ஆனாலும் இந்த கணிப்பில் சிக்கல் உள்ளது. மெஸ்ஸிக்கு அதிக வாய்ப்பு உள்ளது கூறப்பட்டாலும், உலகக்கோப்பை விதிகளின்படி, கோல்களின் எண்ணிக்கை சமமாக இருக்கும்போது ‘அசிஸ்ட்கள்’ (Assists - கோல் அடிக்க உதவியது) கணக்கிடப்படும். தற்போதைய நிலவரப்படி, அசிஸ்ட்கள் கணக்கில் எம்பாப்பே 2-0 என்ற கணக்கில் மெஸ்ஸியை விட முன்னிலையில் உள்ளார். எனவே மாப்பேவுக்கும் அதிக வாய்ப்பு உள்ளது.

கைகலப்பு, தள்ளுமுள்ளு பெனால்டி மூலம் பிரான்ஸ் முன்னேற்றம்

2ஆவது நாக் அவுட் - 16 ஆட்டம் அமெரிக்கா வின் பிலடெல்பியா நகரில் ஞாயிறன்று நடை பெற்றது. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் - பராகுவே அணி கள் மோதின. நாக் அவுட் - 32 ஆட்டத்தில் பராகுவே ஜெர்மனியை வீழ்த்தி இருந் ததால், இந்த ஆட்டம் முக்கிய நட்சத்திர போட்டி யாக ரசிகர்களால் அதிகள வில் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஆட்டத் தின் தொடக்கம் முதலே பிரான்ஸ் அணி தாக்குதல் பாணியில் இறங்கியது. ஆனால் அந்த அணியால் பெனால்டி பாக்ஸை நோ க்கி பந்தை கடத்த முடிய வில்லை. அந்தளவுக்கு பரா குவே அணி ‘தடுப்பாட்டத் தில் நங்கூர சுவர்’ அமைத்து இருந்தது. தள்ளுமுள்ளு - கைக்கலப்பு ஆட்டத்தின் 34ஆவது நிமிடத்தில் பராகுவே வீரர்க ளுக்கும், பிரான்ஸ் அணி யின் நட்சத்திர வீரர் மாப் பேவுக்கும் திடீரென வாக்கு வாதம் ஏற்பட்டது. பிரான்ஸ் வீரர் டெம்பில்லே,”நீ எப் படி எங்கள் நாட்டு வீரரை சீண்டலாம்” என்பது போல, பராகுவே வீரர்களிடம் தள்ளுமுள்ளுவை உரு வாக்கிக் கொடுக்க, பிரான்ஸ் - பராகுவே வீரர்க ளுக்கு கைக்கலப்புடன், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நடுவர் எச்சரிக்கையால் இரு அணி வீரர்களும் கலைந்து சென்றனர். முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. பெனால்டி மீண்டும் மோதல் இரண்டாம் பாதியின் 70 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனா ல்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை மாப்பே கோலாக மாற்றினார். இந்த கோல் உலகக்கோப்பை வரலாற் றில் பிரான்ஸ் அணி அடித்த 150ஆவது கோல் என்ற வரலாற்றுச் சாதனை யாகவும் அமைந்தது. அடுத்த 2 நிமிடத்தில் ‘நீர்ச் சத்து இடைவேளை’ (Hy dration Break) போது (72’) பராகுவே வீரர்களுக்கும் - மாப்பேவுக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில், ஆட்டநேர முடிவில் பரா குவே பதிலுக்கு கோலடிக்க வில்லை. இறுதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன் னேறியது. ஆட்டம் முடிந்த வுடன் வெற்றிக் கொண்டா ட்டம் என்ற பெயரில் மாப்பே பராகுவே வீரர்களிடம் வம்பு இழுத்தார். ஆனால் பராகுவே வீரர்கள் கண்டு கொள்ளவில்லை.

கவனம் பெற்ற பராகுவேவின் முரட்டுத்தனமான

தற்காப்பு ஆட்டம் பிலடெல்பியா மைதானத்தில் நிலவிய கடுமையான வெப்பநிலைக்கு மத்தியில், பராகுவே அணி பிரான்ஸ் வீரர்களுக்குக் கடுமையான தற்காப்பு சவாலை அளித்தது. பிரான்ஸ் அணி 15 ஷாட்களை அடித்த போதிலும், பராகுவே அணியின் கோல்கீப்பர் ஆர்லாண் டோ கில் பல சிறந்த தடுத்தலை செய்து பிரான்ஸின் கோல் வாய்ப்புகளைத் தடுத்தார். பராகுவே அணியின் நட்சத்திர வீரார்களான என்சிஸோ, அல்மிரோன் ஆகியோர் காயம் காரணமாக ஆட்டத்தின் நடுவே வெளியேறியது அந்த அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.

‘குட்டி பிரேசிலான’ வங்கதேசம்

கால்பந்து உலகத்தரவரிசையில் 181ஆவது இடத்தில் உள்ளது வங்கதேசம். அந்நாடு கால்பந்தில் இருக்கிறதா? என்று கூட சரிவர தெரியாது. 2026 உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றின் முதல் கட்டத்திலேயே வங்கதேச அணி வெளியேறியது. இருப்பினும் அந்நாட்டு மக்கள் 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணியை தங்களது சொந்த நாட்டு அணியைப் போலக் கருதி ஆதரவளித்து வருகின்றனர். இதனை வங்கதேசத்தைச் சேர்ந்த புகைப்படப் பத்திரிகையாளர் ஷானூர் ருமேன் அங்கு பிரேசிலுக்கு நிலவும் ஆதரவை அம்பலப்படுத்தியுள்ளார். அவரது புகைப் படங்களில் எங்கு பார்த்தாலும் மஞ்சள், பச்சை வண்ணங்களுடன் ரசிகர்கள் பிரேசில் ஜெர்சியை ஓவியமாக பொறித்துள்ளனர்.

நாக் அவுட் சுற்று 16 ஆட்டங்கள் - திங்கள், செவ்வாய்

போர்ச்சுக்கல் - ஸ்பெயின் நேரம் : நள்ளிரவு 12.30 மணி இடம் : டல்லாஸ், அமெரிக்கா

அமெரிக்கா - பெல்ஜியம் நேரம் : அதிகாலை 5.30 மணி இடம் : சியாட்டில், அமெரிக்கா

சேனல்: ஜீ 5 (ஓடிடி), யுனைட்8 (தொலைக்காட்சி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.