சிங்கங்களும் மனிதர்களும் இணைந்து வாழும் காடு
16 May 2026, 8:12 pm

சிங்கங்களும் மனிதர்களும் இணைந்து வாழும் காடு

மோரேஞ்சல்ஸ் எம்பிசாவின் (Moreangels Mbiza) வாழ்வில் அந்த திருப்புமுனை 2014இல் ஏற்பட்டது.

சூழல் பாதுகாப்பு உயிரியலாளரான அவர் அப்போது ஜிம்பாப்வேயில் உள்ள ஹெச்வாஞ்ஜ் (Hwange) தேசியப் பூங்காவில் தன் விலங்கியல் முனைவர் பட்ட ஆய்விற்காக வெப்ப மண்டலப் புல்வெளிப்பகுதிகளில் (savannah) வாழும் சிங்கங்களின் நடமாட்டத்தை ஆராய்ந்துகொண்டிருந்தார்.

அப்பகுதியில் இருப்பிடமறியும் தொழில்நுட்ப சமிஞ்கை ஏதோ தவறு நடந்திருப்பதை கூறியது. விட்லி விருது பெற்ற பெண்மணி ஒரு சிங்கம் அருகிலிருக்கும் கிராமத்திற்குள் நுழைந்து மக்கள் வாழ்வையும் தன் வாழ்வையும் ஆபத்திற்குள்ளாக்கியிருந்தது.

எம்பிசாவும் அவரது குழுவினரும் சிங்கத்தை அதன் வாழிடத்திற்கு திருப்பியனுப்ப முயன்றனர்.

குழுவினர் அந்த இடத்தை அடைந்தபோது அலறல் ஓசைகள் கேட்டன. “அது ஒரு பயங்கரக் காட்சி. ம

க்கள் ஒரு புதரைச் சுற்றி நின்றபடி கத்திக்கொண்டிருந்தார்கள். அந்த சிங்கம் ஒரு இளம் வயதுப் பையனைக் கொன்றுவிட்டது.

அது பதறவைக்கும் காட்சி. ஏழு வயதுப் பையனின் உடலை தன் பாதங்களுக்கு இடையில் சிங்கம் வைத்திருந்ததைப் பார்த்து சுமார் 30 கிராம மக்கள் எதுவும் செய்ய இயலாதவர்களாக நின்றனர். வனத் துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டு சிங்கம் கொல்லப்பட்டது.

பையனின் உடல் மீட்கப்பட்டது. இது வயிற்றில் விழுந்த ஒரு பெரிய அடி போல இருந்தது.

அது வரை சிங்கங்களைப் பாதுகாக்க நான் செய்தது பிரச்சனைக்கு பாதி தீர்வு மட்டுமே என்பதை அப்போது நான் உணர்ந்தேன்” என்று எம்பிசா கூறுகிறார்.

அவரது இந்த அனுபவம் அவர் உன்னத தொழில்நுணுக்கங்கள், தொழில்நுட்பங்களின் உதவியுடன் மக்கள் மற்றும் வன உயிரினங்கள் ஒற்றுமையுடன் வாழ்வதை மையமாகக் கொண்டு செயல்படும் வன உயிரினப் பாதுகாப்பு செயல்பாடு (Wildlife Conservation Action (WCA)) என்ற அமைப்பு உருவாக காரணமானது.

இது எம்பிசாவிற்கு வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சூழலியல் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் மிக உயரிய சர்வதேச விருதுகளில் ஒன்றான, “பசுமை ஆஸ்கார்” (Green Oscars) என்று பரவலாக அழைக்கப்படும் விட்லி ((Whitley) விருதை விருதைப் பெற்றுத்தந்தது.

ஜிம்பாப்வேயின் எம்பயர்(Mbire) மாவட்டத்தில் உயிர்ப் பன்முகத் தன்மைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ள மனித வனவிலங்கு மோதல்களைக் குறைக்க இந்த அமைப்பு பாடுபடுகிறது.

ஆப்பிரிக்கா முழுவதும் வரலாற்று காலம் முதல் இருந்த தம் வாழிடத்தின் 90 சதவிகிதத்தை சிங்கங்கள் இன்று இழந்துவிட்டன.

இப்போது வனங்களில் வெறும் 20,000 சிங்கங்கள் மட்டுமே வாழ்கின்றன.

மக்கள் தொகை பெருகுவதால், வாழிடப் பரப்பு சுருங்குவதால் அவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கும் அப்பால் உள்ள இடங்களுக்கு உணவு தேடி இடம்பெயர்கின்றன.

இதனால் மக்கள் மற்றும் அவர்களின் கால்நடைகளுக்கும் சிங்கங்களுக்கும் இடையில் நேரடி மோதல்கள் ஏற்படுகின்றன.

எம்பிசா இத்தகைய மோதல்களைத் தடுக்க செயல்படுகிறார். “

ஜாம்பசி (mid-Zambezi) பள்ளத்தாக்கின் வழியாக ஜிம்பாப்வே, ஜாம்பியா மற்றும் மொசாம்பிக் நாடுகளை இணைக்கும் பரந்து விரிந்த உயிர்ப் பன்முகத் தன்மை பெருவழியில் கிராமப்புற மக்கள் வளர்க்கும் கால்நடைகளை வைத்தே அவர்களின் செல்வ வளம் மதிப்பிடப்படுகிறது. ஒரு பசுமாட்டின் விலை 300 டாலர். ஒரு ஆட்டின் விலை 30 டாலர்.

ஒளி புகா பிளாஸ்டிக் தொழில்நுட்பம் கால்நடைகளில் கிடைக்கும் பொருட்கள், மதிப்பு மிக்க அவற்றின் விலை ஆகியன சேர்ந்து மக்களின் வாழ்வாதாரமாக சராசரி 108 டாலர் மாத வருமானத்தை அவர்களுக்குப் பெற்றுத்தருகிறது.

இரை பிடி உயிரினங்களால் கால்நடைகள் கொல்லப் பட்டால், யானைகள் பயிர்களை மிதித்துச் சேதப்படுத்தின ால் மக்களால் பதிலுக்கு வன விலங்குகள் கொல்லப்படுகின்றன.

இருபக்கமும் இழப்பு ஏற்படுகிறது. மக்கள் உடைமைகளை இழக்கிறார்கள்.

வன உயிரினங்கள் இழக்கப்படுகின்றனஎன்று எம்பிசா கூறுகிறார். இதில் ஒரு முக்கியத் தூணாக சமூகப் பாதுகாவலர்கள் விளங்குகின்றனர்.

வன உயிரின பாதுகாப்புச் செயல்பாடு அமைப்பால் உள்ளூர் மக்கள் இரை பிடி உயிரினங்கள் அருகில் வரும்போது இருப்பிடமறியும் தொழில்நுட்ப சமிஞ்ஞைகள் (GPs)மூலம் பெறப்படும் எச்சரிக்கைகளை மக்களுக்கு அனுப்புகின்றனர்.

இதன் மூலம் மக்கள் கால்நடைகள், பயிர்கள், உயிரைப் பாதுகாத்துக் கொள்கின்றனர்.

வன விலங்குகளும் பாதுகாக்கப்படுகின்றன. “சமூகத்தை மேம்படுத்தி, உணர்வூட்டி, ஊக்கப்படுத்தி இந்த மாதிரியை பயன்படுத்தி மக்களை வன விலங்குகளுடன் இணைந்து வாழவைப்பது பற்றி ஆராய்ந்துவருகி றோம்.

இதில் ஒரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பே மொபைல் போமா (boma) என்ற திட்டம்.

கால்நடைகள் ஒளி புகா பிளாஸ்டிக்கால் (opaque plastic) மூடப்படுகின்றன.

ஒளிபுகாப் பிளாஸ்டிக் என்பது ஒளியைத் தன் வழியே அனுமதிக்காத, ஒரு பொருளின் மறுபக்கத்தை பார்க்க முடியாத பிளாஸ்டிக் வகை.

இவை பெரும்பாலும் அடர்த்தியான நிறமிகள் அல்லது மூலக்கூறு அமைப்புகளால் ஆனவை.

கிராமத்திற்கு சிங்கம் வரும்போது அதனால் கால்நடையை பார்க்கமுடியாது. சிங்கத்தால் நுகரமுடியும். கேட்கமுடியும்.

ஆனால் அவற்றால் பார்க்கமுடியாததால் அவை கால்நடைகளைத் தாக்குவதில்லை. இந்த மொபைல் போமா கால்நடைகளைப் பாதுகாப்பதில் 90% துல்லியத்த ன்மையுடன் செயல்படுகிறது” என்று எம்பிசா கூறுகிறார்.

இம்முயற்சியின் முடிவுகள் மகத்தானவை என்று வன உயிரினப் பாதுகாப்பு அமைப்பு கூறுகிறது.

இதனால் மனித வன விலங்கு மோதல்கள் 98% குறைந்துள்ளது.

இவ்வமைப்பின் பணிகள் சாம்பசி பள்ளத்தாக்கில் இப்போது 2.8 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் செயல்படுகிறது. 2.3 மில்லியன் டாலர் மதிப்புள்ள கால்நடைகள் இதன் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.

42 வயதான எம்பிசா தென் கிழக்கு ஜிம்பாப்வேயில் கைரெட்சி (Chiredzi) என்ற சிறிய ஊரில் வளர்ந்தார்.

பழகினால் பாசம் ஏற்படும் வன விலங்குகள் வாழும் பகுதியில் இருந்து மைல்கணக்கிலான தூரத்தில் வளர்ந்த அவர் இது போன்ற வன விலங்குகளை தன் 25 வயது வரை சந்தித்ததில்லை.

சிறிய இம்பாலா ஒன்று வரிக்குதிரைகளைச் சுற்றி குதித்து விளையாடிய முதல் காட்சியை அவர் இப்போதும் தெளிவாக தன் நினைவில் வைத்திருக்கிறார். “

நான் வாழ விரும்பிய இடம் இதுதான் என்பதை இது உறுதிசெய்தது.

எனக்கும் இயற்கைக்கும் இடையில் வலுவான தொடர்பு இருப்பதை உணர்தேன். அப்போதே என் தொழில் தொடங்கியது.

பல ஜிம்பாப்வே மக்களுக்கு உயிர்ப் பன்மயத் தன்மையுடன் குறுக்கிடுவது அரிதானதே. சூழல் பாதுகாப்பு என்பது கருப்பின பெண்களுக்குஅரிதினும் அரிது. இ

து எனக்கு தனிமையை ஏற்படுத்துகிறது. வேறெந்த கருப்பு ஆப்பிரிக்கப் பெண்னும் ஜிம்பாப்வேயில் ஒரு சூழல் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தவில்லை. இந்த இடைவெளி இட்டு நிரப்பப்படவேண்டும்.

இளம் ஆப்பிரிக்கப் பெண்கள் செயல் மூலம் அனுபவம் பெறுகின்றனர். மனதளவில் சூழலைப் பாதுகாக்க தயார்ப்படுத்திக் கொள்கின்றனர்.

இதுதான் என் கதை. ஆனால் எனக்குப் பின்னால் வருபவர்கள் எல்லோரின் கதையும் இது போல இருக்கக்கூடாது” என்று புதிய பாதை அமைத்து எல்லோருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்துவரும் எம்பிசா கூறுகிறார். 2

014இல் முனைவர் பட்டப்படிப்பின்போது சிங்கங்களுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினார்.

ஜிம்பாப்வேயின் பெரிய பூனைக்குடும்பத்தில் புகழ்பெற்ற சிங்கங்களில் ஒன்றான செசில் (Cecil) என்ற ஆண் சிங்கம் பொழுதுபோக்கிற்காக ஒரு அமெரிக்கரால் வேட்டையாடப்பட்டு (trophy hunting) கொல்லப்பட்டதை அறிந்தார்.

இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.

செசில் இறந்துவிட்டது என்று தனக்கு வந்த தொலைபேசி அழைப்பை அவர் இன்றும் நினைவில் வைத்திருக்கிறார். “

நீங்கள் உங்கள் நேரத்தை சிங்கங்களுடன் அதிகமாக செலவழிக்கும்போது அவற்றுடன் உங்களுக்கு ஒரு பாசப்பிணைப்பு ஏற்படுவதை உணரலாம்.

செசில் கொல்லப்பட்டது என் இதயத்தை உடைத்து சுக்குநூறாக்கியது” என்று எம்பிசா கூறுகிறார்.

செசிலுக்கு நேர்ந்த கதி, குழந்தையை இழந்த கிராமத்து மக்களைக் கண்ட காட்சி இனிமேலும் எனக்கு ஏற்படக்கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கிறேன்.

சிங்கங்களும் மனிதர்களும் இணக்கமாக வாழ உதவும் வழிகளைக் கண்டுபிடிக்கவேண்டும்.

மக்களைப் பாதுகாக்காமல் நம்மால் சிங்கங்களைப் பாதுகாக்கமுடியாது” என்று எம்பிசா கூறுகிறார்.

சிங்கங்கள் என்ற மகத்தான உயிரினங்களின் வாழ்விற்காக தன் வாழ்வையே அர்ப்பணிக்கும் இந்தப் பெண்மணியின் கதை உலகிற்கே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!