முந்தய பக்கம்

ஒடிசா சுரங்கத்துறை அதிகாரி வீட்டில் ரூ.4 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல்!

25 Feb 2026, 7:37 am
ஒடிசா சுரங்கத்துறை அதிகாரி வீட்டில் ரூ.4 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல்!

ஒடிசாவில் சுரங்கத் துறையின் துணை இயக்குநர் ஸ்ரீ தேபப்ரத மோகந்தி லஞ்ச ஒருப்பித்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டபூர்வமான நிலக்கரி விற்பனையாளரிடமிருந்து ரூ.30,000 லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டில், ஒடிசா கட்டக் வட்டார சுரங்கத் துறையின் துணை இயக்குநர் ஸ்ரீ தேபப்ரத மோகந்தி நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
அவரை கைது செய்ததைத் தொடர்ந்து, ஒடிசா லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கட்டக்கில் உள்ள அவரது அலுவலக அறை, பத்ரக் மாவட்டம் மாதாசாஹியில் உள்ள அவரது பெற்றோர் வீடு மற்றும் புவனேஸ்வரில் உள்ள அவரது குடியிருப்பு இல்லத்தில் ஒரே நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டனர்.
தற்போது நடைபெற்று வரும் சோதனைகளில், புவனேஸ்வரில் உள்ள அவரது குடியிருப்பு வீட்டில் ட்ராலி பைகளிலும் அலமாரிகளிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடிக்கு மேற்பட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக கைப்பற்றப்பட்ட பணத்தின் சரியான தொகையை கணக்கிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பணப் பறிமுதல், ஒடிசா லஞ்ச ஒழிப்பு துறை வரலாற்றில் இதுவரை நடந்த மிகப்பெரிய பணப் பறிமுதலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram