போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கைது
23 Dec 2025, 4:05 pm
<p><strong>போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கைது </strong></p>
<p>செங்கல்பட்டு, டிச.23 - பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 6 ஆவது நாளாக சென்னையை அடுத்த நந்திவரம் கூடுவாஞ்சேரி யில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.18 முதல் சென்னையில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம் பாட்டு சங்கத்தினர் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கொண்டு சென்றுவிட்ட னர். இரவு முழுவதும் செவிலியர்கள் போராட்டத் தில் ஈடுபட்டதால் மீண்டும் கைது செய்து ஊரப்பாக் கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து நந்திவரம் கூடுவாஞ் சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்கி 6 நாட் களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆறாவது நாளான செவ்வாயன்று (டிச.23) செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் போராட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வந்த செவிலியர்களை காவல்துறையினர் காலை முதல் தொடர்ந்து கைது செய்து வந்தனர். சுமார் 217 செவிலியர்கள் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத் தில் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வந்த நிலையில் மாலை 4 மணியளவில் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலை யம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட னர். ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் போராட்டம் நடத்தியவர்கள் மீது இரண்டு பிரிவு களில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.</p>
