10க்கும் மேற்பட்ட நாரைகள் மரணம்: பறவைக் காய்ச்சல் அச்சம்!
3 Mar 2026, 3:38 pm
<p><strong>10க்கும் மேற்பட்ட நாரைகள் மரணம்: பறவைக் காய்ச்சல் அச்சம்!</strong></p>
<p>நாமக்கல், மார்ச் 3- தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் அண்மைக் காலமாக காகங் கள் உள்ளிட்ட பறவைகள் உயிரி ழந்து வரும் நிலையில், ராசிபுரம் அருகே ஒரே இடத்தில் 10-க்கும் மேற் பட்ட நாரைகள் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம். ராசிபுரம் அடுத்துள்ள முத்துகாளிப்பட்டி பகு தியில் உள்ள ஒரு ஆலமரத்தின் அடி யில், திங்களன்று 10-க்கும் மேற் பட்ட நாரைகள் திடீரென உயிரி ழந்து கிடந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தக வல் தெரிவித்தனர். அதன்பேரில் நோய் புலனாய்வுத் துறையினர், ராசிபுரம் கோழி நோய் ஆய்வுக்கூட உதவி இயக்குநர் மணிவேல், வனத் துறையினர், சுகாதாரத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த னர். உயிரிழந்த பறவைகளை பார் வையிட்ட அதிகாரிகள், அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தூவி முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த மரணங்கள் குறித்து அதி காரிகள் கூறுகையில், “உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் சேகரிக் கப்பட்டுள்ளன. இவை விரிவான ஆய்வுக்காக பெங்களூருவில் உள்ள மத்திய நோய் கண்டறியும் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப் பட உள்ளன. ஆய்வு முடிவுகள் வெளிவந்த பின்னரே, இந்தப் பறவைகள் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்தனவா அல்லது வேறு ஏதேனும் நச்சுத்தன்மையால் உயி ரிழந்தனவா என்பது உறுதி செய்யப்படும்,” என தெரிவித்த னர். இதுகுறித்து சூழலியலாளர்கள் மற்றும் கால் நடை மருத்தவர்கள் கூறுகையில், தற்போது ஆசிய நாடுகளில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் வைரஸ் (H5N1), நீர் வாழ் பறவைகள் மற்றும் வலசை போகும் பறவைகள் மூலம் எளிதாக பரவக்கூடியது. கொக்குகள் மற் றும் நாரைகள் பெரும்பாலும் நீர் நிலைகளை சார்ந்து இருப்பதால், அவற்றுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். பாதிக்கப்பட்ட பறவைகளின் எச்சம், எச்சில் அல்லது அவற்றை தொடுவதன் மூலம் மற்ற பறவைக ளுக்கும், அரிதான சூழலில் மனிதர் களுக்கும் தொற்று பரவக்கூடும். நாமக்கல் மாவட்டம் ஆசியாவி லேயே மிகப்பெரிய முட்டை உற் பத்தி மையமாக திகழ்வதால், இங் குள்ள கோழிப்பண்ணைகளை பாதுகாக்க பறவை உயிரிழப்பு கள் தீவிரமாக கண்காணிக்கப்படு கின்றன. உயிரிழந்த பறவைகளை வெறும் கைகளால் தொடக்கூ டாது. பறவைகள் மர்மமான முறை யில் இறந்தால் உடனடியாக கால் நடை பராமரிப்புத் துறைக்கோ அல் லது உள்ளூர் அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். பண்ணை வைத்திருப்போர் வெளி யாட்கள் மற்றும் பிற பறவைகள் பண்ணைக்குள் வராமல் உயிரி யல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இருந்த போதும், ஆய்வு முடிவுகள் வந்த பிறகே நாரைகள் இறந்ததற்கான காரணம் தெரியவரும், என்றனர்.</p>
