மோரை தொழிற்பேட்டையை ‘பொது தொழில்துறை மண்டலமாக’ மீண்டும் வகைப்படுத்துக வீட்டுவசதி துறை அமைச்சரிடம் கோரிக்கை
21 Jul 2026, 11:42 pm
<p><strong>மோரை தொழிற்பேட்டையை ‘பொது தொழில்துறை மண்டலமாக’ மீண்டும் வகைப்படுத்துக வீட்டுவசதி துறை அமைச்சரிடம் கோரிக்கை</strong></p><p>சென்னை, ஜூலை 21- அண்ணாமலை பல் கலைக்கழக முன்னாள் மாணவர்களால் 1989ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அவேட்டா மோரை தொழிற் பேட்டை சங்கம் சார்பில், தங்கள் தொழிற்பேட்டை நிலத்தை மீண்டும் ‘பொது தொழில்துறை பயன் பாட்டு மண்டலமாக’ வகைப் படுத்தக் கோரி சங்கத்தின் தலைவர் எல்.கார்த்திகே யன், செயலாளர் சி.மது, பொருளாளர் கே.எஸ்.சங்கீதா ஆகியோர் தலை மையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரிடம் மனு அளிக்க ப்பட்டது. அந்த மனுவில். 80 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்பேட்டை, 1989 ஜூலை 19 அன்று வெளியிடப்பட்ட அரசு அரசி தழிலும், முதலாவது பெருந் திட்டத்திலும் ‘பொது தொழில்துறை பயன்பாட்டு மண்டலமாக’ வகைப்படுத்தப்ருந்தது, இருப்பினும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் தயாரித்த இரண்டாவது பெருந்திட்டத்தில் இந்த பகுதிக்கான நில வகைப் பாடு விடுபட்டுள்ளது. நிலப் பயன்பாட்டை மீண்டும் மாற்றம் செய்யக் கோரி, சி.எம்.டி.ஏ. கோரிய படி சங்கத்தின் கீழ் உள்ள 50 நிறுவனங்கள் உரிய படிவங்களை பூர்த்தி செய்து, துணை வட்டாட்சியர் ஒப்பு தலுடன் ரூ.65,000 விண்ணப் பக் கட்டணம் செலுத்தி, அதற்குரிய ஆவணங்களை நேரடியாகச் சமர்ப்பித் துள்ளோம்.. தற்போது 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலை யில், மேலும் 50 நிறுவனங் கள் புதிய அலகுகளை அமைக்கத் தயாராக உள்ளன. சுமார் 100 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் 3,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பும், அரசுக்கு கணிச மான வருவாயும் இதன் மூலம் கிடைக்கும். கோரிக்கை புதிய அரசு பொறுப் பேற்ற இரு மாதங்களுக்குள் சி.எம்.டி.ஏ-விடமிருந்து தொழிற்பேட்டை தொடர் பாக இரு கடிதங்கள் (கடித எண்: சிஎம்டிஏ/778/2026-எம்பிஐ தேதி 15.5.2026 & சி1/3087/2023 தேதி 4.6.2026) வந்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கி றோம். அரசிதழில் குறிப் பிட்டபடி தங்கள் தொழிற் பேட்டையில் உள்ள அனைத்து மனைப் பிரிவு களையும் மீண்டும் ‘பொது தொழில்துறை மண்டல மாக’ மாற்றியமைத்து அர சாணை வெளியிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், இது அரசுக்கு வருவாய் வரக் கூடியது. எனவே பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் என்று தெரிவித்தார். இச்சந்திப்பின் போது சங்கத்தின் நிர்வாகிகள் கே.கிருஷ்ணசாமி, கே.எம். செல்லபாபு, கனி, பென்னி ஆகியோர் உடன் இருந்த னர்.</p>
