தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மூல வைகையில் ஏழு வகை மீன்கள்! மேகமலை ஆற்றில் ஒரு மீன் ஆய்வுப் பயணம் - ஜெ.பொன்மாறன்

yesterday
மூல வைகையில் ஏழு வகை மீன்கள்! மேகமலை ஆற்றில் ஒரு மீன் ஆய்வுப் பயணம் - ஜெ.பொன்மாறன்

மூல வைகையில் ஏழு வகை மீன்கள்! மேகமலை ஆற்றில் ஒரு மீன் ஆய்வுப் பயணம் - ஜெ.பொன்மாறன்

தேனி மாவட்டம், மேகமலைத் தொடரில் உருவாகி வருசநாடு வழியாகப் பாய்கிறது மூல வைகையாறு. அதன் தலைப்பகுதியில் எந்தெந்த மீன்கள் வாழ்கின்றன என்று அறிய ஒரு கள ஆய்வு நடந்தது. ஆற்றின் தலைப்பகுதி நலமாக இருந்தால்தான் கீழே பாயும் ஆறும் நலமாக இருக்கும். அங்கு வாழும் மீன்களின் வகைகள், எண்ணிக்கை, அவை வாழும் சூழல், அவற்றுக்கு வரும் ஆபத்துகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதே ஆய்வின் நோக்கம். அதில் ஏழு வகை நன்னீர் மீன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் கல்லொட்டி, பால் கெண்டை ஆகியவை அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன.

கண்டறியப்பட்ட மீன்கள்

கல்லொட்டி (Garra mullya) – 41%

பால் கெண்டை (Plesiopuntius bimaculatus) – 27%

இளச்சிக் கெண்டை (Esomus thermoicos) – 16%

தார்க்கெண்டை (Devario aequipinnatus) – 9%

சொட்ட வாளை (Ompok malabaricus) – 3%

குரவை (Channa orientalis) – 2%

அயிரை (Schistura denisoni) – சுமார் 1%

இந்த விகிதங்கள் இந்த ஆய்வில் பிடிபட்ட மீன்களை மட்டுமே குறிக்கின்றன. அயிரை குறைவாகப் பிடிபட்டதை வைத்து, அது அழிந்து வருகிறது என்று முடிவு செய்ய முடியாது. நீரோட்டம், பருவநிலை, ஆய்வு முறை ஆகியவற்றைப் பொறுத்து பிடிபடும் மீன்கள் மாறும். ஆற்றின் மொத்த மீன் வளத்தை அறிய, வெவ்வேறு பருவங்களிலும் ஆற்றின் பல பகுதிகளிலும் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

அடுத்து என்ன?

மீன்வளத் துறையும் மீன்வளப் பல்கலைக்கழகமும் இணைந்து, எல்லாப் பருவங்களிலும் ஆற்றின் பல பகுதிகளில் விரிவான ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். பரம்பரையாக மீன்பிடிக்கும் உள்ளூர் மக்களுக்கு ஆற்றின் பருவ மாற்றங்களும் மீன்களின் நடமாட்டமும் நன்கு தெரியும். அந்த அனுபவ அறிவையும் அறிவியலோடு இணைத்தால், பல ஆண்டுகளில் ஆற்றில் நடந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடியும்.

குஞ்சுகள் நிறைந்த ஆறு

ஆய்வு நடந்தபோது புதுவெள்ளம் பாய்ந்த ஆற்றில் இளம் மீன்களே அதிகம் காணப்பட்டன. வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட அயல் மீன் இனங்கள் எதுவும் ஆய்வு நடந்த இடங்களில் தென்படவில்லை. இது நல்ல செய்தி. ஆனாலும் உறுதியாகச் சொல்ல, வெவ்வேறு பருவங்களில் மேலும் ஆய்வுகள் தேவை. மீன்களின் வளர்ச்சி, இனப்பெருக்கம், உணவுத் தேடல், இடம்பெயர்வு, நீரின் தரம் எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையவை. அதனால் ஆண்டுதோறும் தரவுகளைச் சேகரித்து ஒப்பிட்டால்தான் ஆற்றில் நடக்கும் மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடியும்.

மீன்களுக்கு என்ன ஆபத்து?

ஆற்றின் இரு கரைகளிலும் இருந்த இயற்கைச் சோலைகள் அழிக்கப்பட்டுள்ளன. சுற்றியுள்ள தேயிலை, தேக்கு, முந்திரி, இலவம், தென்னந்தோப்புகளில் வீரியமான வேதிப்பொருள்கள் தெளிக்கப்படுகின்றன. கரையோர மரங்கள்தான் மீன்களுக்கு உணவும் மறைவிடமும் முட்டையிடும் இடமும் தருகின்றன. அவை அழிந்தால் மீன்களும் வாடும். வேதிப்பொருள்கள் ஆற்றில் கலந்தால் நீர் நஞ்சாகும். மணல் அள்ளுவதும் அணைகளும் ஆற்றின் இயற்கை ஓட்டத்தைத் தடுக்கின்றன. சில மீன்கள் தம் வாழ்க்கைச் சுழற்சியின் வெவ்வேறு கட்டங்களில் ஆற்றின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பயணிக்கின்றன. அந்தப் பாதை அடைபட்டால், அவற்றின் இனப்பெருக்கமே பாதிக்கப்படும். எனவே ஆற்றின் தொடர்ச்சியான ஓட்டத்தைக் கருத்தில் கொண்டே எந்தத் திட்டமும் வகுக்கப்பட வேண்டும்.

ஆய்வுக் குழு

சேறல் மரபாண்மை மற்றும் சூழலியல் ஆய்வு நடுவம் சார்பில், 2026 பிப்ரவரி 1, அக்டோபர் 2 ஆகிய நாட்களில் இந்த ஆய்வு நடந்தது. விலங்கியல் பேராசிரியரும் நன்னீர் மீன் ஆய்வாளருமான முனைவர் ப. சிவக்குமார் தலைமை தாங்கினார். காட்டுயிர் ஆய்வாளர்கள் ந. இரவீந்திரன், விஸ்வநாத், கார்த்திக், தமிழ்தாசன், வரலாற்று ஆய்வாளர் மூ. செல்வம், ஒளிப்படக் கலைஞர் கேசவன், உள்ளூரில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் மு. தெய்வேந்திரன், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். ஆற்றின் மூன்று இடங்களில் பகலிலும் இரவிலும் வலை வீசிப் பிடித்த சுமார் 100 மீன்களின் உருவ அமைப்பை ஆராய்ந்து, படம் எடுத்து ஆவணப்படுத்தினர். நீரின் தன்மை, வெப்பநிலை போன்ற அடிப்படைத் தரவுகளையும் சேகரித்தனர். மனிதர்களின் செயல்பாடுகளால் ஆற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் பதிவு செய்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.