முந்தய பக்கம்

மூக்கனூர் ஊராட்சியில் சேதமடைந்த புதிய தார்சாலை

9 Oct 2026, 1:42 am
மூக்கனூர் ஊராட்சியில் சேதமடைந்த புதிய தார்சாலை

மூக்கனூர் ஊராட்சியில் சேதமடைந்த புதிய தார்சாலை

சங்கராபுரம், அக். 8 –கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூக்கனூர் ஊராட்சியில் உலகுடையாம்பட்டு முதல் சிவபுரம் வரை அமைக்கப்பட்ட புதிய தார்சாலை சில மாதங்களிலேயே சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மூக்கனூர் ஊராட்சியில் உள்ள உலகுடையாம்பட்டு முதல் சிவபுரம் வரை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், இந்தச் சாலையின் சுமார் 50 மீட்டர் பகுதி மட்டும் தற்போது குண்டும் குழியுமாக மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. சாலை அமைக்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் இவ்வளவு சீக்கிரம் சேதமடைந்து இருப்பது, இது தரமற்ற முறையில் அமைக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

குண்டும் குழியுமான இந்த மோசமான சாலையால் அவ்வழியாக தினந்தோறும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும், அலுவலகம் செல்வோரும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் இரவிலும், மழை நேரங்களிலும் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயகரமான சூழல் நிலவுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற முறையில் சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram