நகரும் பருவமழை : வெப்ப அலை தீவிரம்
10 Jul 2026, 8:00 pm

நகரும் பருவமழை : வெப்ப அலை தீவிரம்

கடந்த சில நாட்களாக நாடு முழு வதும் வெளுத்து வாங்கிய கன மழை, மக்களின் அன்றாட வாழ்க்கை யைச் சீரமைத்ததோடு, வறண்டு கிடந்த விவசாய நிலங்களுக்கும் பெரும் புத்துயிர் அளித்தது. இந்நிலையில், தற்போது பருவ மழையின் தீவிரம் குறையத் தொடங்கி, நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் வறண்ட மற்றும் வெப்பமான வானிலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பான அறிவி ப்பில், “ஜூன் மாதத்தில் கடந்த 126 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு வறட்சி யைச் சந்தித்த இந்தியா, ஜூலை மாதத் தொடக்கத்தில் ஒன்பது நாட்களாகத் தொடர்ந்து இயல்பை விட அதிக மழை யைப் பெற்றது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்ட லமே இந்த மாற்றத்திற்குக் காரணம். இருப்பினும், தற்போது பருவமழை வீசும் திசை இமயமலை அடிவாரத்தை நோக்கி நகர்ந்துள்ளதால், நாட்டின் பிற பகுதிகளில் மழையின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.

மழை குறையும் பகுதிகள்

பருவமழை நகர்வால், வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதி களுக்குக் காற்று திசைமாறி, மேற்கி லிருந்து வறண்ட காற்று வீச வாய்ப்புள்ளது. இதன் விளைவாக தில்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், குஜ ராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெரிதாக இருக்காது.