பருவமழை அதிகரித்தால் வெப்பம் குறையும்!
15 Jul 2026, 10:06 pm
<p><strong>பருவமழை அதிகரித்தால் வெப்பம் குறையும்!</strong></p><p>சென்னை, ஜூலை 15 - நடப்பாண்டில் எல்நினோ பாதிப்பு அதிகரித்து வருவதால் வெப்பநிலை உயர்ந்து வருவதாகவும், வருங்காலங்களில் தென்மேற்குப் பருவமழை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் குறையும் எனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிக உயர்ந்த அதிகபட்ச வெப்பநிலையாகக் கருதப்படும் 42.5 செல்சியஸ் அளவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) மதுரையில் பதிவானது. பூமத்திய ரேகையைத் தாண்டி வீசும் தென்மேற்குக் காற்று பலவீனமடைந்திருப்பதும், மேற்கு அரபிக்கடல் பகுதியில் கீழ்மட்ட ஜெட் காற்று (சோமாலி ஜெட்) இயல்பை விடக் குறைந்த வலிமையுடன் வீசுவதும், அவற்றுடன் இணைந்த எல்நினோ தாக்கமுமே, இந்த வெப்ப நிலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன என்று வானிலை மையம் விளக்கியுள்ளது. எல்நினோ காரணமாக, அரபிக்கடலில் இருந்து வீசும் ஈரப்பதம் குறைந்த காற்று, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிர தேசம், தெலுங்கானா பகுதிகளில் குறைந்துபோன மழைப்பொ ழிவு, மேகமற்ற வானம் காரணமாக வெப்ப நிலை உயர்ந்து வரு கிறது. எனவே, உள் தமிழகம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா வின் சில பகுதிகளுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இருப்பினும், ஜூலை 17 முதல் சோமாலி ஜெட் காற்று படிப்படியாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால், தென் தீபகற்ப இந்தியாவில் பருவமழை மீண்டும் தீவிரமடையும் என்றும், அதன் விளைவாக வாரத்தின் 2 ஆம் பாதியில் வெப்ப அலை படிப் படியாகக் குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.</p>
