‘பருவமழை பாதிப்பு பணவீக்கத்தை அதிகரிக்கும்’
8 Jul 2026, 8:39 pm
<p><strong>‘பருவமழை பாதிப்பு பணவீக்கத்தை அதிகரிக்கும்’</strong></p><p>புதுதில்லி பருவமழையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக இந்தி யாவின் பணவீக்கம் அதி கரிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீட்டில் உணவுப் பொருட்கள் 40 சதவிகித முக்கி யத்துவத்தைக் கொண்டுள் ளன. மின்சாரம், தண்ணீர், எரி வாயு போன்ற பிற எரிபொ ருட்கள் 17.66 சதவிகித பங்க ளிப்பையும், பெட்ரோல், டீசல் போன்ற போக்குவரத்து எரி பொருட்கள் 8.8 சதவிகித பங்க ளிப்பையும் கொண்டுள்ளன. எனவே, உணவுப் பொ ருட்களின் விலையில் ஏற்படும் மாற்றம் ஒட்டுமொத்த பண வீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பருவமழையும் கவலையும் உணவுப் பொருட்களின் விலை நேரடியாகக் கால நிலையைச் சார்ந்துள்ளதால், விவசாயத்திற்கு பருவமழை மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டு ‘எல் நினோ’ பாதிப் பால், நீண்டகால சராசரியை விட மழைப்பொழிவு 10 சதவிகி தம் குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. ஜூலை 6, நிலவரப்படி, மழைப்பற்றாக்குறை 20 சத விகிதம் ஆக உள்ளது. பருவமழையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக உண வுப் பொருட்களின் விலை உயர்ந்தால், அது மக்களின் குடும்ப பட்ஜெட்டைப் பாதிப்ப தோடு, பணவீக்கத்தையும் உயர்த்தும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகள், இனி பருவ மழையின் செயல்பாட்டை யே அதிகம் சார்ந்திருக்கப் போவதாக நிபுணர்கள் கருது கின்றனர்.</p>
