தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பருவமழைப் பொய்ப்பு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு விவசாயமும் குடிநீரும் எதிர்கொள்ளும் சவால்கள் - மு.மோகனவள்ளி

31 Aug 2026, 9:05 pm
பருவமழைப் பொய்ப்பு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு விவசாயமும் குடிநீரும் எதிர்கொள்ளும் சவால்கள் - மு.மோகனவள்ளி

பருவமழைப் பொய்ப்பு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு விவசாயமும் குடிநீரும் எதிர்கொள்ளும் சவால்கள் - மு.மோகனவள்ளி

“ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற பழமொழிப்படி, ஆடி மாதம் என்பது விவசாயிக்கு விதைப்பு, நடவு, நீர்ப்பாசனம் போன்ற வேளாண் நடவடிக்கைகளுக்கான மிக முக்கிய காலமாகும். ஆனால் இன்று விவசாயி வானத்தைப் பார்த்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தமிழர்களின் பண்பாட்டில் மட்டுமல்லாமல், வேளாண்மையிலும் இது முக்கியமான காலமாகும். ஆனால் இன்று ஆடி பிறந்தாலே விவசாயிகளின் மனதில் மகிழ்ச்சியைவிட மழை வருமா, கிணற்றில் தண்ணீர் இருக்குமா, பயிரைக் காப்பாற்ற முடியுமா என்ற கேள்விகளே அதிகமாக எழுகின்றன. ஒருபுறம் பருவமழையின் காலமும் தன்மையும் மாறிக்கொண்டிருக்கிறது. மறுபுறம் நிலத்தடி நீர் வேகமாக உறிஞ்சப்படுகிறது. இதன் விளைவாக கிராமப்புற விவசாயியும் நகர்ப்புற சாமானிய மக்களும் தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

“நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவரின் வாக்கு, இன்றைய காலகட்டத்தில் நம் கண்முன்னே உண்மையாகிக் கொண்டிருக்கிறது. மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை,உறைவிடம் ஆகியவற்றுடன் தண்ணீரும் மிக முக்கியமானதாகும். ஆனால் இன்று பல பகுதிகளில் குடிநீர்தட்டுப்பாடு, நிலத்தடி நீர்மட்டம் குறைதல், மழைப்பொழிவு மாற்றம், நீர்நிலைகள் அழிப்பு போன்ற பிரச்சனைகள்தீவிரமடைந்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக காலநிலை மாற்றம் பார்க்கப்படுகிறது. பருவமழை சரியான நேரத்தில் பெய்யாமல் போவது, சில நேரங்களில் குறுகியகாலத்தில் அதிக மழை பெய்வது, நீண்ட கால வறட்சி ஏற்படுவது போன்ற மாற்றங்கள் விவசாயம் முதல் சாதாரணமக்களின் அன்றாட வாழ்க்கை வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. சில கிராமங்களில் குடிநீருக்காக லாரிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. நகரங்களில் குடிநீர் விநியோகத்தில்இடையூறு ஏற்படுவதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. தண்ணீர் கிடைப்பதில்ஏற்படும் சிரமம் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அதிகமாகப் பாதிக்கிறது. குறிப்பாக பெண்கள் குடும்பத்திற்குத்தேவையான தண்ணீரைச் சேகரிப்பதற்காக அதிக நேரத்தை செலவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால்அவர்களின் வேலை, கல்வி மற்றும் வருமான வாய்ப்புகளும் பாதிக்கப்படுகின்றன.

தண்ணீர் தட்டுப்பாடு என்பது வெறும் குடிநீர் பிரச்சனை அல்ல. அது குடும்பத்தின் பொருளாதாரம், சுகாதாரம்,கல்வி மற்றும் வேலைவாய்ப்பையும் பாதிக்கக்கூடிய பிரச்சனையாகும். குடிநீர் கிடைக்காத பகுதிகளில் மக்கள் தனியார் வாகனங்கள் மூலம் தண்ணீர் வாங்க வேண்டிய நிலைஏற்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதச் செலவு அதிகரிக்கிறது. தண்ணீரின் விலை உயரும்போது ஏற்கெனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.சுகாதாரப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. தண்ணீர் பற்றாக்குறையால் சுகாதாரம் மற்றும் தனிப்பட்டதூய்மையைப் பராமரிப்பது சிரமமாகிறது. இதனால் நோய்கள் பரவும் அபாயமும் அதிகரிக்கிறது.

காலநிலை மாற்றமும் எல் நினோ தாக்கமும்காலநிலை மாற்றம் என்பது வெப்பநிலை அதிகரிப்பை மட்டும் குறிக்கவில்லை. மழைப்பொழிவு முறையில்ஏற்படும் மாற்றம், அதிக வெப்ப அலைகள், நீண்ட வறட்சி, திடீர் கனமழை மற்றும் வெள்ளம் போன்ற பல்வேறு நிகழ்வுகளும் அதன் தாக்கங்களாகும். ஒருபுறம் மழை குறைவதால் நீர்த்தேக்கங்கள் வறண்டு போகின்றன. மறுபுறம் குறுகிய நேரத்தில் பெய்யும் கனமழை நிலத்திற்குள் போதுமானஅளவு ஊடுருவாமல் வெள்ளமாக வெளியேறி விடுகிறது. இதனால் ஒரே ஆண்டில் வெள்ளமும் வறட்சியும் என்றஇரு எதிர்மறையான நிலைகளையும் மக்கள் சந்திக்க வேண்டியசூழல் உருவாகிறது.

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் கிழக்கிலிருந்து வீசும் காற்று சூடான கடல் நீர் பகுதிக்கு நகர்ந்துகுளிர்ந்த ஆழ்கடல் நீர் மேலே வருவதாகும். இதனால் உலகளாவிய வளிமண்டலச் சுழற்சியில் மாற்றம்ஏற்படுகிறது. இத்தகைய பருவநிலைக்கு தென்மேற்குப் பருவமழையைப் பாதிக்கும் தன்மையும் உண்டு என்றுஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக பருவமழை குறைந்து வறட்சி ஏற்படும் வாய்ப்பும்அதிகரிக்கிறது. வெப்பநிலை அதிகரிப்பதால் குறைந்த மழைப்பொழிவு ஏற்பட்டு விவசாய உற்பத்திபாதிக்கப்படும். இதன் காரணமாக விளைபொருள்களின் உற்பத்தியும் குறைந்துபோகும்.

விவசாயிகளின் துயரமும் தென்னை மரங்களின் அழிவும்

விவசாயம் தண்ணீர் பற்றாக்குறையின் மிகப்பெரிய தாக்கத்தைச் சந்திக்கிறது. தேவையான நீர் கிடைக்காதபோது பயிர்கள் காய்ந்து போகின்றன. விவசாயிகள் பருவமழை தவறும்போது பொருளாதார இழப்பைச் சந்திக்கின்றனர். மழை தாமதமானால் விதைப்பு தாமதமாகிறது. மழை அதிகமாக ஒரே நாளில் பெய்தால் மண் அரிப்புஏற்படுகிறது. மழை இல்லாமல் நீண்ட இடைவெளி ஏற்பட்டால் பயிர்கள் காய்கின்றன. மழைநீரை நம்பியி ருக்கும்விவசாயிகளின் மின்சாரச் செலவும், பாசனச் செலவும், உற்பத்திச் செலவும் அதிகரித்து, விவசாயியின் வருமானம் குறைகிறது. நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஆழ்துளைக்கிணறுகளின் ஆழமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதல்செலவு ஏற்படுகிறது.

2026-ஆம் ஆண்டில் மழைப்பொழிவு எதிர்பார்த்த அளவில் இல்லாத பகுதிகளில் விவசாயிகள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக மழையை நம்பி பயிரிடும் விவசாய நிலங்களில் விதைப்பு தாமதம், பயிர்களின் வளர்ச்சிகுறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் குறைவதால், ஏற்கெனவே பயிரிடப்பட்ட பயிர்களைக்கூட காப்பாற்ற முடியாத சூழல் உருவாகியுள்ளது. தென்னைவிவசாயம் இந்த நெருக்கடியின் முக்கியமான பாதிப்புகளில் ஒன்றாகும். தொடர்ந்து மழை இல்லாததால்மண்ணில் ஈரப்பதம் குறைகிறது. நிலத்தடி நீர்மட்டமும் குறையும்போது தென்னை மரங்களுக்குத் தேவையான நீர்கிடைக்காமல், இலைகள் மஞ்சள் நிறமாகி உதிர்வதும், குரும்பைகள் உதிர்வதும், காய்களின் அளவு குறைவதும்ஏற்படலாம். நீண்டகால நீர்ப்பற்றாக்குறை நீடித்தால் சில மரங்கள் முழுமையாகக் காய்ந்து உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. தென்னை ஒரு பருவப் பயிர் அல்ல, பல ஆண்டுகள் வளர்த்து தொடர்ந்து வருமானம் தரும் பயிராகும். எனவே ஒரு தென்னை மரம் காய்ந்து போவது ஒரு பருவத்தின் இழப்புமட்டுமல்ல, விவசாயியின் பல ஆண்டுகால முதலீடு மற்றும் எதிர்கால வருமானத்தின் இழப்பாகும்.

சுத்தமான குடிநீரும் மழைநீர் சேமிப்பின் அவசியமும்

குடிநீர் கிடைப்பது மட்டுமல்லாமல், பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் கிடைப்பதும் மக்களின் அடிப்படை உரிமை மற்றும் சுகாதாரத் தேவையாகும்.எனவே, குடிநீர் ஆதாரங்களில் அவ்வப்போது தரப் பரிசோதனை நடத்தி, மாசுபட்ட நீர் மக்களுக்குவிநியோகிக்கப்படாமல் அரசு உறுதிசெய்ய வேண்டும். குழாய்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பது, பழையகுடிநீர் குழாய்களை மாற்றுவது, குடிநீர் தொட்டிகளை முறையாகச் சுத்தம் செய்வது போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாட்டிற்கு நீண்டகாலத் தீர்வாக மழைநீர் சேமிப்பு மிக முக்கியமானதாகும். பெய்யும் ஒவ்வொரு துளிமழைநீரையும் வீணாக்காமல் வீடுகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், தொழிச்சாலைகள் மற்றும் வணிகவளாகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். மழைநீரை நிலத்திற்குள்செலுத்து வதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும். கண்மாய்கள், ஊரணிகள், ஏரிகள் மற்றும்நீர்வரத்து கால்வாய்களைத் தூர்வாரிப் பாதுகாப்பது மழைநீரைத் தேக்கி வைக்க உதவும்.

அரசும் பொதுமக்களின் கூட்டுப் பொறுப்பும்

விரைவாக நடைபெறும் நகரமயமாக்கலும் தண்ணீர் பிரச்சனைக்குப் பெருங்காரணமாக உள்ளது. ஏரிகள், குளங்கள், கண்மாய்கள்மற்றும் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப் படும்போது மழைநீரைச் சேமிக்கும் இயற்கை யான அமைப்புகள்அழிக்கப்படுகின்றன. எனவே, வளர்ச்சி என்ற பெயரில் நீர்நிலைகளை அழிப்பதைத் தவிர்த்து, நீர்நிலைகளைப்பாதுகாப்பதும் அவற்றை மீட்டெடுப்பதும் அவசியம். தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அரசு நீண்டகாலத்திட்டங்களையும் உடனடி நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதுடன், கிராமப்புறங்களில் நிரந்தரமான குடிநீர் ஆதாரங்களை உருவாக்க வேண்டும்.

தண்ணீர் பிரச்சனையை அரசு மட்டும் தீர்க்க முடியாது. ஒவ்வொரு குடிமக்களும் தண்ணீரைச் சேமிக்கும்பழக்கத்தை உருவாக்க வேண்டும். தேவையில்லாமல் குழாயைத் திறந்து விடுதல், குடிநீரை வீணாக்குதல், வீடுகளில் ஏற்படும் நீர் கசிவுகளைச் சரிசெய்யாமல் விடுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு,வீட்டு உபயோகத்தில் நீர் மறுபயன்பாடு, மரக்கன்றுகள் நடுதல் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளில் மக்கள்நேரடியாகப் பங்கேற்க வேண்டும். இன்று நாம் பயன்படுத்தும் தண்ணீர் நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல;எதிர்கால தலைமுறைக்கும் அது தேவை. எனவே, “அரசு பாதுகாக்கும் நீர் - மக்கள் சேமிக்கும் நீர்” என்றபொறுப்புணர்வு ஒவ்வொரு குடிமக்களிடமும் உருவாக வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.