தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோளிபள்ளி வி.இராமசாமி நினைவு தினம் அனுசரிப்பு

23 Jul 2026, 11:51 pm
மோளிபள்ளி வி.இராமசாமி நினைவு தினம் அனுசரிப்பு
<p><strong>மோளிபள்ளி வி.இராமசாமி நினைவு தினம் அனுசரிப்பு</strong></p><p>நாமக்கல், ஜூலை 23- சுதந்திரப் போராட்ட வீரரும், திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மோளிபள்ளி வி. இராமசாமியின் 27 ஆவது நினைவு தினம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட மோளிபள்ளியில் அனுசரிக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரான மோளிப்பள்ளி வி.இராமசாமி, மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டார். திருச்செங்கோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய அவர், உழைக்கும் மக்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து சிறை சென்றுள்ளார் நாமக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றிய அவர், 1999-ம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி காலமானார். அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் மார்க்சிஸ்ட் கட்சியினரால் அனுசரிக்கப்படுகிறது. இதன்ஒருபகுதியாக வியாழனன்று, திருச்செங்கோடு அடுத்துள்ள மோளிப்பள்ளியில் வி. இராமசாமி அவர்களின் திருவுருவப்படத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்விற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.குப்புசாமி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், திருச்செங்கோடு முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஆர்.வேலாயுதம், எலச்சிபாளையம் ஒன்றியச் செயலாளர் ஆர்.ரமேஷ், திருச்செங்கோடு செயலாளர் கதிர்வேல் மற்றும் புஸ்பவள்ளி, பெரியசாமி, தங்கவேல், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருச்செங்கோடு டிசிஎம்எஸ் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பிலும், பள்ளிபாளையம், குமாரபாளையம், ராசிபுரம், நாமக்கல், பரமத்தி என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தோழர் வி.ராமசாமி அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.