தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

29 minutes before
விளையாட்டு

விளையாட்டு

வெள்ளை ஜெர்சிக்கு விடைகொடுத்தார் முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி மற்றும் சூப்பர் பாஸ்ட் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

36 வயதான ஷமி வெள்ளிக்கிழமை இரவு தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் எக்ஸ் சமூக வலைத்

தளப் பக்கத்தில் வெளியிட்ட உருக்கமான வீடியோவில்,“வெள்ளை ஜெர்சிக்கு (டெஸ்ட் போட்டியின் உடை) நான் விடை கொடுக்கிறேன். ஆனால் அதனுடன் இணைந்தநினைவுகளுக்கு ஒருபோதும் விடை கொடுக்க மாட்டேன். தனது கடினமான பயணத்தில் உறுதுணையாக இருந்தசக வீரர்கள், பயிற்சியாளர்கள், பிசிசிஐ, பெங்கால் கிரிக்கெட்சங்கம் மற்றும் இறுதி வரை தமக்கு ஆதரவளித்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி” என ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

13 ஆண்டுகால பயணம்

முகமது ஷமி கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம்தேதி மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் புகழ் பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். சரியாக தனது 13 ஆண்டுகால டெஸ்ட் பயணம் நிறைவடைந்த அதே நாளில் (நவ. 6) அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

அசுர வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்ட ஷமி 64 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 27.71 பந்துவீச்சு சராசரியையும், 50.28 என்ற அசாத்திய ஸ்ட்ரைக் ரேட்டையும்கொண்டுள்ளார். ஒரே இன்னிங்ஸில் 56 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது (6/56) இவரதுசிறந்த டெஸ்ட் பந்துவீச்சாகும். குறிப்பாக டெஸ்ட் அரங்கில்6 முறை 5 விக்கெட்டுகளையும், 12 முறை 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.டெஸ்ட் வரலாற்றில் கபில்தேவ் (434), ஜாகீர் கான் (311),இஷாந்த் சர்மா (311), ஜவகல் ஸ்ரீநாத் (236) மற்றும் ஜஸ்பிரித்பும்ரா ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் 6ஆவது மிக வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளராக ஷமி(229) திகழ்கிறார்.

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தொடர்வார்

டெஸ்ட் போட்டிகளில் (சிவப்பு பந்து) இருந்து முழுமையாக விடைபெற்றாலும், ஒருநாள் போட்டிகள், டி-20 மற்றும் ஐபிஎல் போன்ற வெள்ளைப்பந்து கிரிக்கெட் வடிவங்களில் தான் தொடர்ந்து விளையாடப்போவதாக ஷமிதனது வீடியோவில் தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும், உடற்தகுதியைப் பேண உள்நாட்டு ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மழையால் தோல்வியை தவிர்த்த இந்தியா

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி சனிக்கிழமை வெல்லிங்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழைக் குறுக்கிட்டதால் போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது.

அதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 41 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக பிரார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியும் விக்கெட் சரிவோடு கடுமையாக திணறியது.

26 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி109 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். 113ரன்கள் எடுத்திருந்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகனாக குர்னூர் பிரார் அறிவிக்கப்பட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.