முகமது சலீம், சிபிஐ(எம்) மேற்குவங்க மாநிலச் செயலாளர்
28 Mar 2026, 4:13 pm
<p><strong>முகமது சலீம், சிபிஐ(எம்) மேற்குவங்க மாநிலச் செயலாளர்</strong></p>
<p>மேற்குவங்கத்தில் இடது முன்னணிக்கு மக்கள் பேராதரவு அளித்து வருகிறார்கள். நாடு முழுவதும் வகுப்புவாதப் பிரிவினைக்கு எதிராக நாம் போராடி வருகிறோம். வங்கத்தில், பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பிரிவினைவாத அரசியலைப் பயன்படுத்தி மக்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ளன. அது கோவில்-மசூதி விவகாரமாக இருக்கட்டும், இந்து-முஸ்லிம் பிரச்சனையாக இருக்கட்டும் அல்லது வங்கதேசத்தவர்-வங்கதேசத்தவர் அல்லாதார் குறித்த கேள்வியாக இருக்கட்டும். இவை அனைத்துமே பிரிவினையைத் தூண்டும் விவகாரங்களாகும். தற்போது, மேற்கு வங்க மக்கள் இத்தகைய பிரிவினைகளை ஏற்கத் தயாராக இல்லை என்பது எங்கள் பிரச்சாரத்தில் தெளிவாக வெளிப்பட்டு வருகிறது.</p>
