சாதனை என்பது வெறும் நாட்கணக்கு அல்ல!
11 Jun 2026, 8:01 pm

சாதனை என்பது வெறும் நாட்கணக்கு அல்ல!

இந்தியாவின் நீண்ட கால பிரதமர் என்ற சாதனையில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வின் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி முறி யடித்து விட்டதாக கூறி மத்திய அமைச்சரவை பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த சாதனைக்காக உலகத் தலைவர்கள் பலரும் மோடிக்கு ‘பாராட்டு மழை’ பொழிவதாகவும் ஊடகங்கள் ஊதுகின்றன.

ஒரு ஆட்சியாளருடைய சாதனை என்பது நாட்கணக்கில் மட்டும் கணக்கிடப்படுவதில்லை. இந்தியாவின் முதல் பிரதமர் நேருவை விட அதிக நாட்கள் பிரதமர் நாற்காலியில் மோடி அமர்ந்திருக்கிறார் என்ற புள்ளிவிபரக் கணக்கு சரிதான். ஆனால் இவருடைய இந்த ஆட்சி இந்திய மக்களுக்கானதா? அல்லது இவரது கட்சியான பாஜகவை வழிநடத்தும் பாசிச அமைப் பான ஆர்எஸ்எஸ் நலன் சார்ந்ததா? என்கிற கேள்வியும், இவருடைய ஆட்சிக்காலம் ஏன் கோடானுகோடி ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டதா? அல்லது பிரதமர் மோடி யின் கார்ப்பரேட் கூட்டாளிகளின் நலனை கருத்தில் கொண்டதா? என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற் பதற்கு முன்பு வழங்கப்பட்ட வாக்குறுதிகளான ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை, கருப்புப் பணத்தை கைப்பற்றி அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும், வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்திச் செலவைவிட ஒன்றரை மடங்கு கூடுதலாக விலை கிடைக்க வகை செய்யப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் கிழிந்து தொங்கு கின்றன.

பண மதிப்பிழப்பு உள்ளிட்ட பிரதமர் நரேந் திர மோடியின் பொருளாதார நடவடிக்கைகள் பரிதாபமாக பிரதமரைப் பார்த்துச் சிரிக்கின்றன. பிரதமராக நேரு இருந்த காலத்தில் ஏராளமான பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப் பட்டன. இன்னும் சில ஆண்டுகள் பிரதமராக மோடி நீடித்தால் அனைத்து பொதுத்துறைகளை யும் அழித்தவர் என்ற பெருமையும் அவருடைய ‘சாதனைப் பட்டியலில்’ சேரக்கூடும்.

நேரு பிரதமராக இருந்தபோதுதான், அயல் துறையில் கூட்டுச் சேராக் கொள்கை உருவாக் கப்பட்டது. ஆனால் அந்தக் கொள்கையை முற்றாக கைகழுவிவிட்டு அமெரிக்க வல்லர சுக்கு ஆதரவான அயல்துறைக் கொள்கையை பிரதமர் மோடி பின்பற்றுகிறார். இவருடைய ஆட்சிக் காலத்தில் மதச்சார்பின்மை, ஜனநாய கம், கூட்டாட்சி போன்ற அரசியல் சட்ட விழுமி யங்கள் மதிப்பிழக்க செய்யப்பட்டன. சிறுபான்மை மக்களுக்கு எதிரான தொடர் தாக்கு தல்கள், கருப்புச் சட்டங்களின் மூலம் பலவும், நேரடியாகவும் தொடுக்கப்படுகின்றன. நாடாளு மன்ற ஜனநாயகத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற ஜனநாயகத்தை எந்த அளவுக்கு சேதப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு சேதப்படுத்தியுள்ளார். சாதனை என்பது நாட்களைக் கொண்டு அளக்கப்படுவது அல்ல.