தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

23 Sept 2026, 8:43 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

டிரம்பை சந்திக்கும் நரேந்திரமோடிஅமெரிக்க தூதர் தகவல்

டிசம்பர் 14 - 15 வரை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடக்கும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக அமெரிக்க தூதர் அறிவித்துள்ளார்.

வழக்கமாக பிரதமர் மோடியின் பயணம் குறித்த அறிவிப்புகள் பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு அரசுத்தரப்பில்

இருந்து தெரிவிக்கப்படும். தற்போது அவரது பயணத்தை இந்திய அரசு அறிவிக்கும் முன் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஜி20 மாநாட்டில் டிரம்ப் சந்திக்கவிருக்கும் முக் கிய தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என்றார்.

இருதரப்பு வர்த்தகம் மற்றும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள 100 சதவீத வரிகள் மூலமாக இந்தியாவை அமெரிக்க மிரட்டி வரும் சூழலில் இந்த சந்திப்பு தொடர்பான தகவல் முக்கியத்துவம் பெற் றுள்ளது.

ஏசி வெடித்து பச்சிளம் குழந்தை பலி

தெலுங்கானா மருத்துவமனையில் சோகம்தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏசி வெடித்ததில் பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் பாதிக்கப்பட்ட 24 குழந் தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் உள்ள ஏசி இயந்திரம் நள்ளிரவில் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் பீதியடைந்த பெற்றோர், குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடினர். அப்போது, அங்கிருந்த பணியாளர்கள்உடனடியாக மின் இணைப்பைத் துண்டித் தனர். இதனால் பெரும் விபத்து தடுக்கப் பட்டது. எனினும் இந்தச் சம்பவத்தின் போது பிறந்து 5 நாட்களே ஆன ஒரு குழந்தை பரிதாபமாக இறந்தது.பாதிக்கப்பட்ட குழந்தைகள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள் ளன. அதில் 3 குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.மின்கசிவால் ஏசி வெடித்துத் தீ விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந் துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைஷ்ணவி தேவி கோவில் காணிக்கை திருட்டு

4 மாதங்களாக வழக்குப்பதிவுசெய்யாத காவல்துறைஜம்மு - காஷ்மீர் வைஷ்ணதேவி கோயிலில் பக்தர்களின் ரூ.550 கோடி மதிப்பிலான வெள்ளி காணிக்கைகள் திருடப்பட்டபுகாரில், 4 மாதங்களாகியும் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படாதது அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

இந்த தீவிர முறைகேடு புகார் எழுந்து 4 மாதங்கள் கடந்த பிறகும், இதுவரை குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவுசெய்யப்படவில்லை. இதுதொடர்பான விசாரணை நிலை அறிக்கையை ஜம்மு தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதமன்றத்தில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் செப்.19 அன்று தாக்கல் செய் தார். இதனைத் தொடர்ந்து, அடுத்தகட்ட விசாரணைக்கு அவகாசம் வழங்கி அக்டோபர் 10 க்கு நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது. நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட அறிக்கையில், கோயில் ஊழியர்கள், பூசாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி, கருவூலத்தில் உலோகம் சேமிக்கப்படும் நடைமுறைகள் ஆய்வு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். எனினும், வழக்கின் மிக முக்கிய அங்கமான கோயில் நிர்வாக உயர்அதிகாரிகளிடம் இன்னும் வாக்குமூலம் பெறப்படவில்லை என்பதை அவர் கள் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தயார்:டி.கே.சிவக்குமார்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி தொடர்பான கஸ்தூரிரங்கன் அறிக்கை குறித்து பிரதமர் மோடி மற்றும் சம்பந்தப்பட்ட அமைச் சர்களை சந்திப்பதற்கு முன்பு, கர்நாடகாவின் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் கூட்டத்தைக் கூட்டத் தயாராக இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித் துள்ளார்.

கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான உயர்மட்டப் பணிக்குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில், மேற்குத் தொடர்ச்சி மலையின் 37 சதவீத பகுதியான சுமார் 56,825 சதுர கிலோமீட்டர் பரப்பளவைச் சூழலியல் உணர்திறன்மிக்க பகுதியாக அறிவிக்கும் படி அரசுக்குப் பரிந்துரை செய்தது.

இந்த உயர்மட்டக் குழு பரிந்துரைத்த பகுதியின் 20 ஆயிரம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில், கர்நாடகாவின் 1,500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியானது சூழலியல் உணர்திறன்மிக்க பகுதியாக அறிவிக்கப்படும் பட்சத்தில் இங்கு வசிக்கிற மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பாதிக் கப்படும் என்று கூறி, கர்நாடக அரசு கஸ் தூரிரங்கனின் அறிக்கைக்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.சித்தராமையா முதலமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே, கஸ்தூரிரங்கனின் அறிக்கையானது நிராகரிக்கப் பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டது. அதனால் மாநிலங்களுக்குப் பயனளிக்கும் வகையில் அந்த அறிக்கையில் திருத் தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தவிவகாரத்தில் கட்சிப் பாகுபாடின்றி அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒருமித்த ஒரு முடிவை எட்டவேண்டும். அரசும்ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுப்பதில் உறுதியாக உள்ளது என சிவக் குமார் கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.