தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்க – இந்திய தாராள வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து மோடி-டிரம்ப் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் அறிவிப்பு

17 Jul 2026, 11:23 pm
அமெரிக்க – இந்திய தாராள வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து  மோடி-டிரம்ப் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் அறிவிப்பு
<p><strong>அமெரிக்க – இந்திய தாராள வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து மோடி-டிரம்ப் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் அறிவிப்பு</strong></p><p>திருப்பூர், ஜுலை 17- அமெரிக்க - இந்திய தாராள வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து ஜூலை 22 ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிரா மங்களில் மோடி-டிரம்ப் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்து வது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கங் களின் திருப்பூர் மாவட்ட நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் வியாழ னன்று ஊத்துக்குளி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், எஸ். சின்னசாமி, ஆர்.குமார், ஜி.கே.கேச வன், எஸ்.கே.கொளந்தசாமி ஆகி யோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடி முழுமையான தாக இல்லாததால் விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர். முதல்வர் ச.ஜோசப்விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி, ஜுலை 20 அன்று திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி, அவிநாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய வட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங் கள் முன்பாக கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், இரண்டு சங்கங்களின் கொடிகளு டன் பங்கேற்பது என்றும், இந்த கோரிக்கையில் உடன்பாடு உள்ள இதர சங்கங்களையும் இணைத்துக் கொண்டு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. நாட்டின் விவசாய உற்பத்திக் கும், விவசாய விளைபொருளுக்கும் விலை வீழ்ச்சி ஏற்பட வழிவகுக்கும், நாட்டின் இறையாண்மையை அடகு வைக்கும், அமெரிக்க -இந்திய தாராள வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த் தும், கைவிடக் கோரியும், அகில இந்திய அளவில் அறிவிக்கப்பட் டுள்ள மோடி-டிரம்ப் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் திருப் பூர் மாவட்டத்தில் ஜுலை 22-ந் தேதியன்று கிராம அளவில் 50-க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.