‘சட்லஜ்’ திரைப்பட விவகாரம் ஆஸ்திரேலியாவில் நையப்புடைக்கப்பட்ட மோடியின் பக்தர்
15 Jul 2026, 9:06 pm

‘சட்லஜ்’ திரைப்பட விவகாரம் ஆஸ்திரேலியாவில் நையப்புடைக்கப்பட்ட மோடியின் பக்தர்

பிரதமர் மோடியின் சமீபத்திய ஆஸ்திரேலியப் பயணத்தின் போது (ஜூலை 8 முதல் 10 வரை) ‘சட்லஜ்’ எனும் பஞ்சாபி படத்திற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து சீக்கியர் ஆதரவு போராட்டக்காரர்க ளுக்கும், பாஜக ஆதரவாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியா கியுள்ளது.

பஞ்சாப் மனித உரிமை ஆர்வ லர் ஜஸ்வந்த் சிங் கல்ராவின் வாழ்க் கையை மையமாகக் கொண்ட ‘சட்லஜ்’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடை யை நீக்கக் கோரி ஆஸ்திரேலியாவில் சீக்கிய ஆதரவாளர்கள் போராட்டத்தில் (ஜூலை 9) ஈடுபட்டனர்.

மேலும், மெல் போர்னில் நடைபெற்ற பிரதமர் மோடி யின் பொது நிகழ்ச்சியில் சீக்கிய சமூ கத்தினர் கலந்துகொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அப்போது மெல்போர்னைச் சேர்ந்த ஜக்விந்தர் விர்க் என்பவர், தன்னை பாஜக மற்றும் பிரதமர் மோடியின் ஆதரவாளர் என்று கூறி சீக்கிய ஆதரவாளர்களின் போராட் டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் சீக்கிய ஆதரவாளர்கள் ஜக் விந்தர் விர்க்கை நையப்புடைத்து விட்டனர்.