மோடி திருப்பரங்குன்றம் செல்வதைத் தவிர்க்க வேண்டும் மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை
28 Feb 2026, 2:29 pm
<p><strong>மோடி திருப்பரங்குன்றம் செல்வதைத் தவிர்க்க வேண்டும் மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை</strong></p>
<p>மதுரை, பிப்.28- மோடி திருப்பரங்குன்றம் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மீ.த.பாண்டியன் அளித்த மனு வில்,“கடந்த 2025 டிசம்பர் மாதம் முதல் திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா அருகே கார்த்திகை தீபம் ஏற்றுதல் மற்றும் தர்கா கொடி அகற்றல் போன்ற விவகாரங்களைச் சுற்றி தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சில அமைப்புகள் மற்றும் தலைவர்கள் அங்கு வன் முறைச் சூழலை உருவாக்க முயற்சிக் கின்றனர். இத்தகைய சூழலில் பிரதமர் திருப்பரங்குன்றம் செல்வது மதவாத சக்திகளுக்கு ஊக்கமளிக்கக்கூடும். எனவே, சட்டம்-ஒழுங்கையும் மது ரையின் பாரம்பரிய மத நல்லிணக் கத்தையும் பாதுகாக்கும் பொருட்டு அவர் அங்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்” என அதில் தெரி வித்துள்ளார். அதே நேரத்தில் பிரதமரின் வழி பாட்டு உரிமையை மதிப்பதாகவும், அதற்குப் பதிலாக மீனாட்சியம்மன் கோவில் அல்லது அழகர்கோவில் போன்ற இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் ஆலோசனை வழங்கலாம் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.</p>
