முந்தய பக்கம்

அசாம் தேயிலைத் தோட்டத்தில் மோடி ஷூட்டிங்

1 Apr 2026, 4:02 pm
அசாம் தேயிலைத் தோட்டத்தில் மோடி ஷூட்டிங்
<p><strong>அசாம் தேயிலைத் தோட்டத்தில் மோடி ஷூட்டிங்</strong></p> <p>திப்ரூகர் ஏப்ரல் 9ஆம் தேதி அசாமில் ஒரே கட்ட மாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி வாரத்திற்கு 2 நாள் அசாம் மாநிலத்திற்கு சென்று வருகிறார். இந்நிலையில், புதனன்று அசாம் சென் றுள்ள மோடி, திப்ரூகரில் உள்ள தேயிலைத் தோ ட்டத்தில் 5 கேமராக்களுடன் சிறப்பு ஷூட்டிங் நடத்தினார். இந்த தேர்தல் கால ஷூட்டிங்கில் தேயிலை பறிக்கும் பெண்களுடன் கலந்துரையா டியும், தேயிலை பறித்தும் கொடுத்தார். ஒரே மாதிரி உடை எப்படி? திப்ரூகர் தேயிலைத் தோட்டத்தில் பிரதமர் மோடியுடன் வேலை செய்த பெண்கள் அனை வரும் ஒரே மாதிரி உடை (சேலை) அணிந்து இருந்தனர். அதுவும் அசாம் பாரம்பரிய உடையில். இதன்மூலம் தேர்தல் பிரச்சாரத் திற்காக தேயிலை தொழிலாளிகளுடன் உரை யாடுவது போன்ற ஷூட்டிங்கிற்கு முன்கூட்டி யே அறிவிப்பு வெளியிட்டு ; ஆட்கள் சேர்க்கப்பட்டு ; திரைக்கதை கொடுக்கப்பட்டு; அதனை குறும்படம் அளவிற்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். &nbsp;இந்த ஷூட்டிங் வீடியோவை சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ள மோடி மேலும் கூறு கையில்,&ldquo;தேயிலை என்பது அசாம் மாநிலத்தின் ஆன்மா. இங்கு உற்பத்தியாகும் தேயிலை, உலகம் முழுவதும் பயணிக்கிறது. இன்று காலை திப்ரூகர் தேயிலைத் தோட்டத் தில் பணியாற்றும் பெண்களுடன் கலந்துரை யாடினேன். அது ஒரு மறக்க முடியாத அனு பவம்&rdquo; என்று கூறியுள்ளார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram