வளரும் நாடுகள் மீது பழி சுமத்துவது முறையல்ல!
20 Sept 2026, 9:38 pm

வளரும் நாடுகள் மீது பழி சுமத்துவது முறையல்ல!

சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றங்கள் தொடர்பான விவகாரங்களில், வளர்ந்து வரும் நாடுகள் மீது கார்பன் உமிழ்வுக்கான பொறுப்பைச்சுமத்துவது தவறானது என்றும், அது “தவறான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது” என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 2015 பாரிஸ்காலநிலை உச்சிமாநாட்டில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே ஜி-20 நாடு இந்தியாதான் என்ற அவரது கூற்றில் நியாயம் இருந்தாலும், சர்வதேச அளவில் குரல் கொடுக்கும் அளவுக்கு மோடிஅரசு தனது வெளியுறவுக் கொள்கைகளிலும் உள்நாட்டுத் திட்டங்களிலும் உறுதியாக நிற்கிறதா என்ற கேள்வியைஇந்த விவகாரம் எழுப்புகிறது.

புள்ளிவிவரங்களின்படி, வளர்ந்த நாடுகளின் தனிநபர் கரியமில வாயுக் கழிவு (கார்பன்) உமிழ்வு இந்தியாவின் அளவை விட ஆறு மடங்கு அதிகமாக உள்ளது என்பது தான் உண்மை. மேலும், இந்தியாவின் சூரிய சக்தி திறன் 12 ஆண்டுகளில் சுமார் 2கிகாவாட்டிலிருந்து 160 கிகாவாட்டுக்கு மேல் உயர்ந்துள்ளதுடன், புதைபடிவ எரிபொருள் அல்லாத திறன் (non-fossil capacity) 2026 பிப்ரவரியில் மொத்த அளவில்52.57 சதவீதமாக எட்டியுள்ளது. பாரிஸ் மாநாட்டு இலக்குகளை இந்தியா முன்கூட்டியே எட்டியிருந்தாலும், மறுபுறம்கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் கொள்கைகளும், அணுசக்தி மற்றும் பசுமைத் துறை திட்டங்களில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் ‘சாந்தி சட்டம்’ (SHANTI Act) போன்ற நடவடிக்கைகளும்பெருமுதலாளி களுக்கே ஆதரவாக அமைந்துள்ளன.

சர்வதேச அரங்குகளில் சுற்றுச்சூழல் நீதி பேசும் மோடி அரசு, உள்நாட்டில் உழைக்கும் மக்களின் மீதும் இயற்கையின் மீதும் நடத்தப்படும்கார்ப்பரேட் சூழ்ச்சிகளைக் கண்டுகொள்வ தில்லை. நேபாளத்தில் சமீபத்தில் நிகழ்ந்த பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு போன்ற பேரிடர்கள் உலக நாடுகளின்கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்தியா போன்ற நாடுகள் வரலாற்று ரீதியான பொறுப்பை உணர்ந்துசெயல்படுவது அவசியமாகிறது. ஆனால், பிரதமர் மோடி அவர்களின் பேச்சு சரியானதாக இருந்தாலும், பன்னாட்டுகார்பன்லாபிகளுக்கும் உள்நாட்டு பெருநிறு வனங்களுக்கும் அடிபணியும் பலவீனமான போக்கே மோடி அரசிடம்காணப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் இதர வளர்ந்த நாடுகளின் அழுத்தம் அதிகரிக்கும் போதெல்லாம், சர்வதேச மேடைகளில் முழங்கும் மோடி அரசு, உள்நாட்டில் மட்டும் கார்ப்பரேட் நச்சுக்கழிவுகளையும் மூலதனச் சுரண்டலையும் தடுத்து நிறுத்தத் தவறிவிடுகிறது. வாக்குறுதிகளை அளிப்பதோடுநின்றுவிடாமல், ஏழை நாடுகளின் மீதான மறைமுக அழுத்தங்களை எதிர்த்து சர்வதேச அரங்குகளில் உறுதியாகக்குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் “வளரும் நாடுகள் மீது பழிசுமத்துவது தவறு” என்ற கூற்றுக்குஉண்மையான நியாயம் கிடைக்கும்.