தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மெலோனிக்கு ‘மெலடி’ மிட்டாய் லாபத்தில் மிதக்கும் பார்லே நிறுவனம்

20 May 2026, 9:05 pm
மெலோனிக்கு  ‘மெலடி’ மிட்டாய் லாபத்தில் மிதக்கும்  பார்லே நிறுவனம்

மெலோனிக்கு ‘மெலடி’ மிட்டாய் லாபத்தில் மிதக்கும் பார்லே நிறுவனம்

ஐந்து நாடுகள் சுற்றுப்பய ணத்தின் ஐந்தாவது மற்றும் நிறைவுப் பகுதியாக இத்தாலி சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு ஒரு பாக்கெட் ‘மெலடி’ (Melody) மிட்டாய் பரிசாக கொடுத்தார்.

இது தொடர்பான காணொலியை மெலோனி தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து வைரலானதை தெடர்ந்து ‘பார்லே’ நிறுவனப் பங்குகளின் விலை யும் அதிரடியாக உயர்ந்தது.

பங்குச்சந்தையில் பட்டியலிடப் படாத பார்லே-ஜி பிஸ்கட் தயாரித்து வரும் ‘பார்லே புராடக்ட்ஸ்’ என்ற தனியார் நிறு வனம் மெலடி மிட்டாயைத் தயாரித்து வருகிறது. ஆனால், சில்லரை முதலீட்டா ளர்கள் அவசர அவசரமாக பங்குச்சந்தை யில் பட்டியலிடப்பட்டுள்ள, ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு மற்றும் கழிவு மேலாண்மைத் துறையில் செயல்படும் ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளனர்.

முதலீட்டாளர்களின் இந்த தவறான புரிதலால், மும்பை பங்குச்சந்தையில் (BSE) சிறிய மதிப்புடைய ‘பார்லே இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் பங்கு விலை புதன்கிழமையன்று 5 சதவிகிதம் வரை உயர்ந்தது. பங்குச்சந்தைகளில் சுமார் 8 லட்சம் பார்லே இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கைமாறியதால் இந்த அதிரடி உயர்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவே பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சென்று கொண்டு இருக்கும் போது பிரதமர் மோடி மிட்டாய் கொடுத்து விளையாடிக் கொண்டுள்ளார். அவரது பயணம் மட்டுமல்ல, அவர் கொடுக்கும் பரிசுகள் கூட பெருமுதலாளிகளையும் கார்ப்ப ரேட்டுகளையும் தான் வாழ வைக்கிறது; பொதுமக்களை கைவிட்டு விடுகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த பயணத்தின் போது இரு நாடுக ளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை 2029 க்குள் 20 பில்லியன் யூரோவாக உயர்த்துவதற்கான திட்டங் கள் குறித்தும், பாதுகாப்பு, உள் கட்டமைப்பு , அதிநவீன தொழில்நுட் பங்கள், எரிசக்தி மாற்றம் மற்றும் நிலை யான மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகப்படுத்து வது குறித்தும் இரு தரப்பும் விவா தித்துள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.