தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்கா முன் இந்தியாவை மண்டியிட வைத்த மோடி!

7 Mar 2026, 2:36 pm
அமெரிக்கா முன் இந்தியாவை மண்டியிட வைத்த மோடி!
<p><strong>அமெரிக்கா முன் இந்தியாவை மண்டியிட வைத்த மோடி!</strong></p> <p>தருமபுரி, மார்ச் 7- யுத்தவெறி பிடித்த அமெரிக்கா முன், இந்தியாவை பிரதமர் மோடி மண்டியிட வைத்துள்ளார் என தருமபுரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அ.சவுந்தரரா சன் கடும் கண்டனம் தெரிவித்துள் ளார். அமெரிக்கா அரசின் டிரம்ப் நிர் வாகம் மற்றும் இனவெறி இஸ்ரேல் &nbsp;அரசுடன் கூட்டு சதி செய்து, பிப்.28 ஆம் தேதியன்று அதிகாலை முதல் ஈரான் மீது கொடூரமான ராணுவத் தாக்குதலை தொடங்கியுள்ளது. இஸ்லாமிய புரட்சிகர காவல் படை முகாமை தாக்கும் முயற்சி யில், ஈரானிலுள்ள பள்ளி மீது தாக்குதல் நடத்தியதில் 150க்கும் &nbsp;மேற்பட்ட மாணவிகள் உயிரிழந் துள்ளனர். அமெரிக்கா - இஸ்ரே லின் யுத்தவெறிக்கு எதிராகவும், இந் திய ஒன்றிய அரசு யுத்த வெறிக்கு எதிராக உரத்துக் குரல் கொடுக்க வலியுறுத்தியும், மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளில் வாழ்வாதாரம் பெற்றுள்ள இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய் யவும் வலியுறுத்தி இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியி னர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் இரா.சிசுபாலன் தலைமை வகித்தார். அப்போது, சிஐடியு அகில இந் திய துணைத்தலைவர் அ.சவுந்த ரராசன் பேசுகையில், கடனால் திவா லாக ஓடுகின்ற நாடு அமெரிக்கா. அந்நாட்டின் டெட்ராய்டு நகராட்சி வருவாய் இல்லாமல் திவாலாகி விட்டது. இந்த அமெரிக்க, இஸ் ரேல் நாடுகள் ஈரான் மீது ஆரம் பித்த யுத்தம் திமிரெடுத்து வந்தது. பல நூற்றாண்டுகளாக, பல நாடு களில் ராணுவத தளங்களை கையில் வைத்துக்கொண்டு அமெரிக்கா &nbsp;மிரட்டுகிறது. டிரம்ப் முதலாளித் துவத்தின் அடாவடியை பகிரங்க மாக காட்டிவிட்டார். எல்லா சட்டத் தையும் அமெரிக்கா மீறுகிறது; பொருளாதார தடை விதிக்கிறது. இது தவறு என்று அமெரிக்க நீதி மன்றம் சொல்கிறது. சின்ன சின்ன நாடுகளெல்லாம் அமெரிக்காவின் பொருளாதார தடையை எதிர்த்து &nbsp;நிற்கின்றன. ஆனால், நம் நாடு &nbsp;எல்லா வகையிலும் மண்டியிட்டு விட்டது. ஈரானின் உச்ச தலைவர் &nbsp;காமேனி படுகொலை செய்யப்பட்ட பிறகும், இது தவறு என்று சொல்வ தற்கு மோடிக்கு தைரியமில்லை. ஒரு நாட்டின் மக்களை கொன்று, அந்நாட்டிலுள்ள செல்வங்களை கொள்ளையடிப்பதற்காகவே யுத் தம் செய்கின்றனர். அமெரிக்கா மக்களே யுத்தத்தை ஏற்கவில்லை. நாம் பாதிக்கப்படுகின்ற மக்க ளுக்கு துணை நிற்போம்; அமெ ரிக்கா ஏகாதிபத்தியத்தை எதிர்ப் போம், என்றார். இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், விசிக மாண வர் சங்க தலைவர் சிவஞானம், விவ சாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் கிள்ளிவளவன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாநிலக்குழு உறுப்பினர் சி.முருகன், மாவட்டச் செயலாளர் கே.கோவிந்தராஜ், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட் டத் தலைவர் என்.சுபேதார் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.