முந்தய பக்கம்

ரூ.180 கோடியை வீணடித்த மோடி அரசு

13 Aug 2026, 9:27 pm
ரூ.180 கோடியை வீணடித்த மோடி அரசு

ரூ.180 கோடியை வீணடித்த மோடி அரசு

2026ஆம்ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 அன்று தொடங்கியது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியஇந்த கூட்டத் தொடரில் நீட் வினாத்தாள்கசிவு, ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீதான தாக்குதல், ராமர் கோவில் முறைகேடு போன்றவற்றிற்கு விளக்கம் மற்றும்விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கோரியது.

ஆனால் மோடி அரசு விளக்கம் அளிக்காமல் ஓடி ஒளிந்தது. குறிப்பாகஎதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்களின் கம்பீரமான பேச்சிற்கும், போராட்டத்திற்கும் பயந்து அரசியல் சாணக்கியர்கள் என அழைக்கப்படும் பிரதமர் மோடி,அமித் ஷா நாடாளுமன்றத்திற்கே வரவில்லை. குறிப்பாக, ஒட்டுமொத்தமாக 20 நாட்களும் அவை நேரத்தை மோடி அரசு வீணடித்துள்ளது. மக்கள் பிரச்சனைகள்குறித்து பெரிதாக விவாதிக்கப்படவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளின் கிளர்ச்சிக்கு இடையே விவாதமின்றி சிலமசோதாக்கள் சட்டவிரோதமாக இயற்றப்பட்டது. இந்த அடாவடியால் மக்கள் வரிப்பணம் ரூ.180 கோடிக்கும் மேல்வீணாக்கியுள்ளது மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு.

Share
FacebookXWhatsAppTelegram