தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சொந்தக் கட்சியினரே எதிர்க்கும் மோடி அரசின் ‘தோல்வித் திட்டம்’

28 Jun 2026, 10:08 pm
சொந்தக் கட்சியினரே எதிர்க்கும்  மோடி அரசின் ‘தோல்வித் திட்டம்’

சொந்தக் கட்சியினரே எதிர்க்கும் மோடி அரசின் ‘தோல்வித் திட்டம்’

ஒன்றிய பாஜக அரசு, கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கும் நோக்கில், ஜூலை 1 முதல் ‘விக்சித் பாரத் - கேரண்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் ஆஜீவிகா மிஷன் (கிராமின்)’ (விபி ஜி ராம் ஜி - VB-G RAM G) என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வருகிறது. ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்’ (MGNREGA) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முந்தைய திட்டத்தைச் சீரழிக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய திட்டத்தில் தொழிலாளர்களின் 100 சதவீத கூலிச் சுமையையும் ஒன்றிய அரசே ஏற்றி ருந்த நிலையில், தற்போது புதிய திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தச் செலவில் 40 சதவீதத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்ற எதேச்சதி கார விதியை மோடி அரசு புகுத்தியுள்ளது.

இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான அப்பட்டமான தாக்குதல் என்பதை, பாஜக ஆளும் பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகளே ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளதன் மூலம் அம்பலமாகி யுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்துள்ள அதிகாரப்பூர்வத் தரவுகள், இந்த 40 சதவீத நிதிப் பகிர்வு முறை மாநில அரசுகளின் மீது தாங்க முடியாத நிதிச் சுமையை ஏற்றியுள்ளது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டி யுள்ளன. தற்போதைய இடைக்கால நிதி ஒதுக்கீட்டின்படி, பீகார் மாநிலம் ₹4,477 கோடியும், மத்தியப் பிரதேசம் ₹4,168 கோடியும், ஜார்கண்ட் ₹1,804 கோடியும் நிதிச் சுமையை ஏற்க வேண்டியுள்ளது. இந்தத் தொகை வெறும் 41 முதல் 43 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்றும், வாக்குறுதி அளிக்கப்பட்ட 125 நாட்களை முழுமையாக வழங்க பீகார் ₹15,939 கோடியும், மத்தியப் பிரதேசம் ₹20,037 கோடியும், ஜார்கண்ட் ₹9,293 கோடியும் நிதி ஒதுக்க வேண்டியிருக்கும் என்பதால் இதிட்டம் முற்றிலும் தோல்வியடையும் என அந்த மாநிலங்கள் எச்சரித்துள்ளன.

விவசாயப் பருவகாலத்தில் 60 நாட்கள் வேலை நிறுத்தக் காலம் (Blackout period) என்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமான புதிய நிபந்தனையையும், சந்தை விலைக்குக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கூலி விகிதத்தையும் பஞ்சாப், ஜார்கண்ட், உத்தராகண்ட், ஜம்மு - காஷ்மீர் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக எதிர்த்துள்ளன. குறிப்பாக பீகார் தற்போதைய கூலியான ₹255-லிருந்து ₹413 ஆகவும், ஜம்மு - காஷ்மீர் ₹272-லிருந்து ₹311 ஆகவும் கூலியை உயர்த்தக் கோரியுள்ளன. தொழி லாளர்களின் பேரம் பேசும் சக்தியைக் குறைத்து, கிராமப்புற உழைப்பாளர்களைத் தங்களின் கார்ப்பரேட் நண்பர்களின் பண்ணைகளுக்கு அடிமைகளாக அனுப்பும் பாசிசச் சூழ்ச்சியே இந்தத் திட்டம். சொந்தக் கட்சியினரே கேள்வி எழுப்பும் அளவுக்கு துவங்கும் முன்பே தோல்வி யடைந்துள்ள இந்த மக்கள் விரோதத் திட்டத்தை மோடி அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.