குழந்தைகளின் தடுப்பூசி திட்டத்திலும் கடுமையான குளறுபடி உலக சுகாதார நிறுவனத்தையும் ஏமாற்றிய மோடி அரசு
17 Jul 2026, 8:19 pm

குழந்தைகளின் தடுப்பூசி திட்டத்திலும் கடுமையான குளறுபடி உலக சுகாதார நிறுவனத்தையும் ஏமாற்றிய மோடி அரசு

புதுதில்லி மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டின் அனைத்துத் துறைகளிலும் குளறு படி, ஊழல் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. மோடி அர சில் அங்கம் வகிக்காத ‘அதானி என்ற துறை’ மட்டுமே குளறுபடி இல்லா மல் நல்ல வளர்ச்சியில் உள்ளன. இந்நிலையில், நாட்டில் குழந் தைகளின் தடுப்பூசி திட்டத்திலும் கடுமையான குளறுபடி ஏற்பட்டுள் ளது அம்பலமாகியுள்ளது. சமீபத் தில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் வெளியிட்ட தடுப்பூசி அறிக்கையில், “இந்தி யாவில் 2025ஆம் ஆண்டில் 97% குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” எனக் கூறப் பட்டுள்ளது. இது ஒரு சாதனை அம்சமாகும். ஆனால் தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பில் (NFHS-6), “நாட்டில் வெறும் 87% முதல் 90% குழந்தைகளுக்கு மட்டுமே

தடுப்பூசிகள்

போடப்பட்டுள்ளன” என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் உலக சுகாதார நிறுவன அறிக்கை - தேசிய குடும்ப நலக் கணக்கெடுப் பில் கடுமையான முரண்பாடுகள் இருப்பது தற்போது அம்பலமாகி யுள்ளது. தடுப்பூசிகள் அதே சமயம் உலக சுகாதார நிறுவன (WHO) அறிக்கையின்படி, ரோட்டா வைரஸ் தடுப்பூசி நாட்டின் 91% குழந்தைகளுக்கு செலுத்தப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தேசிய குடும்ப நலக் கணக் கெடுப்பில் (NFHS-6) ரோட்டா வைரஸ் தடுப்பூசி எண்ணிக்கை 85.4% ஆக உள்ளது. தட்டம்மை முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் 95% (WHO) | 71.8% (NFHS-6) என்ற அளவிலும், போலியோ 95% (WHO) | 85% (NFHS-6) என்ற அளவிலும் கடுமையான முரண் பாடுகளை கொண்டுள்ளன. உண்மையில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டனவா? என கேள்வி எழுப்பும் அள விற்கு முரண்பாடுகளை பஞ்சோத் கவுர் என்ற சுகாதார பத்திரிகை யாளர் ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியுள்ளார். மேலும், இந்தியாவின் தடுப்பூசி முரண்பாடுகள் உண்மைதான் என சுகாதாரப் பொருளாதார நிபுணர் இந்திர நீலும் ஒப்புக்கொண்டுள் ளார். இதுதொடர்பாக அவர் கூறு கையில், “அரசு வழங்கும் நிர்வாகத் தரவுகள் பெரும்பாலும் கள யதார்த்தத்தைவிட அதிகமாக இருக்கக்கூடும். சொல்லுபடியாக இருக்காது. ஆனால் தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்புகளின் நேரடி ஆய்வுகளின் கள உண்மை மிகவும் நம்பகத்தன்மையுடன் இருக்கும்” என அவர் கூறினார்.

‘ஜீரோ-டோஸ்’ பிரிவும் குறைவு

குழந்தைகள் பிறந்தவுடன் வழங்கப்படும் பிசிஜி (BCG) போன்ற தடுப்பூசிகளைப் பெற்றா லும், ஆறு வாரங்களுக்குப் பிறகு செலுத்த வேண்டிய டிபிடி (DPT) தடுப்பூசியைப் பெறாத குழந்தை களே ‘ஜீரோ-டோஸ்’ என வகைப் படுத்தப்படுகின்றனர். இந்த ஜீரோ-டோஸ் பிரிவிலும் கடுமை யான சரிவு ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட 2025இல் இந்தியா வில் தடுப்பூசி பெறாத ‘ஜீரோ-டோஸ்’ குழந்தைகளின் எண்ணி க்கை 6.7 லட்சமாக அதிகரித்துள் ளது. இதனால் குழந்தைகளின் தடுப்பூசி திட்டத்தில் மோடி அரசு உலக சுகாதார நிறுவனத்தை ஏமாற்றியதா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.