தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோடி அரசால் ஏமாற்றப்பட்ட இளைஞர்களின் கிளர்ச்சி - கோ.அரவிந்தசாமி

24 May 2026, 10:43 pm
மோடி அரசால் ஏமாற்றப்பட்ட இளைஞர்களின் கிளர்ச்சி - கோ.அரவிந்தசாமி

மோடி அரசால் ஏமாற்றப்பட்ட இளைஞர்களின் கிளர்ச்சி - கோ.அரவிந்தசாமி

வேலையில்லாத இளைஞர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் “ஒட்டுண்ணிகள்”, “கரப்பான் பூச்சிகள்” என வசைபாடியதற்கு எதிரான நையாண்டிப் பதிலடியாகப் பிறந்த ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’, வெறும் இரு நாட்களில் இன்ஸ்டாகிராமில் ஆளும் பாஜகவின் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையையே மிஞ்சி வியப்பூட்டி யுள்ளது. ஒன்றிய அரசு இவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கியுள்ள போதிலும், “எவ்வளவு ஒடுக்கப்பட்டாலும் உயிர் பிழைத்து நிற்கும்” தலைமுறை எதிர்ப்பின் அடையாளமாக இவ்வியக்கம் உருவெடுத்துள்ளது.

வேலையின்மையும் கார்ப்பரேட் இந்துத்துவ வஞ்சனையும்

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதியை நீர்த்துப்போகச் செய்த கார்ப்பரேட் இந்துத்துவா ஒன்றிய மோடி அரசு, புதிய வேலைகளை உருவாக்காமல், காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கியுள்ளது. போட்டித் தேர்வுகளுக் காகப் பல ஆண்டுகள் உழைக்கும் இளை ஞர்கள், 2026-ன் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற தொடர் முறைகேடுகளால் தற் கொலை விளிம்பிற்குத் தள்ளப்படுகின்றனர்.

படித்து முடித்த கோடிக்கணக்கான பட்டதாரிகள் இன்று தங்களின் தகுதிக்குச் சம்மந்தமில்லாத, நிரந்தரப் பாதுகாப்பற்ற உணவு விநியோகம் (Food delivery) போன்ற ‘கிக் எகனாமி’ (Gig economy) எனும் செயலி வழி தற்காலிக வேலைகளில் மிகக் குறைந்த ஊதியத்திற்குச் சுரண்டப் படுகின்றனர். இதனால் ஏற்படும் மன அழுத்தம், கடன் மற்றும் சமூகப் பாதிப்பு களைப் புரிந்துகொள்ளாமல், கேள்வி கேட்கும் இளைஞர்களைப் “பிரச்சனை செய்பவர்கள்” என பாஜக கும்பல் சித்தரிப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

டிஜிட்டல் கிளர்ச்சியும் தெற்காசியப் பாடமும்

இது வெறும் மீம் (Meme) அரசியல் அல்ல; மாறாக, மீம்களையும், ரீல்ஸ்களை யும் (Reels) பின்தொடரும் ‘ஜென்-இசட்’ (Gen Z) தலைமுறையின் புதிய இணையக் கிளர்ச்சியாகும். முதலாளித்துவத்தால் கட்டமைக்கப்பட்ட இணைய வளர்ச்சியே இன்று முதலாளித்துவத்திற்கு எதிரான இளைஞர் கிளர்ச்சிக்கான வாகனமாக பயன்படுத்தப்படுகிறது.

நேபாளத்தின் அரசியல் ஊழல் எதிர்ப்புப் போராட்டம், இலங்கை யின் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான “அரகலயா” போராட்டம், வங்காளதேச ஆட்சி மாற்றம் என தெற்கா சியாவையே உலுக்கிய இளந்தலைமுறை யின் இணையவழிப் போராட்டங்களின் இந்திய வடிவமே இந்த ‘கரப்பான் பூச்சி’ போராட்டம் எனலாம்.

தமிழ்நாடு காட்டும் வழி

தமிழ்நாட்டிலும் இந்த இணைய அரசியலின் தாக்கம் மிகப்பெரியது. பாரம்பரியப் பிரச்சாரங்களைத் தாண்டி, சமூக வலைதள அரசியல் பாணி மூலம் இளைஞர்களை ஈர்த்துத் ‘தமிழக வெற்றிக் கழகம்’ போன்ற புதிய சக்திகள் கவனம் பெற்றது தற்போதைய ஆளும் வர்க்கத்திற் கான எச்சரிக்கையாகும். இணையப் பக்கங் களை முடக்கினாலும், இளைஞர்களின் கோபம் வெவ்வேறு வடிவங்களில்வெடிக்கும்.

கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் ஒன்றிய மோடி அரசு உடனடியாகப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் இணையம் வழி அரசியல் செய்து ஆட்சியில் அமர்ந்திரு ந்தாலும், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மாநில உரிமைகளுக்காகவும் இளைஞர் நலனுக்காகவும் களத்தில் செயல்பட வேண்டும்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.