ரேஷன் அட்டைகளை முடக்கும் மோடி அரசு
30 Sept 2026, 11:23 pm

ரேஷன் அட்டைகளை முடக்கும் மோடி அரசு

புதுதில்லி தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைகளை ஒன்றியஅரசு இன்று முதல் முடக்க உள்ளது. அடுத்த 3 மாதங்களுக்குள் ‘இ-கே.ஒய்.சி.’ மற்றும் தேவையான கள ஆய்வு மூலம்தகுதி உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவர்களின்ரேஷன் கார்டுகள் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.இந்திய குடி மக்களின் உணவு உரிமையின் அடிப்படையில் நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையிலும், இலவசமாகவும் அத்தியாவசியஉணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், பயன்பாட்டில் இல்லாத ரேஷன் அட்டைகள்,இறந்தவர்களின் பெயரில் உள்ள ரேஷன் அட்டைகள் மற்றும் முகவரி மாறிச் சென்றவர்களின் பெயர்களில் உள்ள ரேஷன் அட்டைகள் மூலம் முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் தொடர்ச்சியாக ஆறு மாதங்களாக ஒருமுறை கூட ரேஷன் பொருட்களை வாங்காத சுமார் 1.58 கோடி பயனாளர்களின் ரேஷன்அட்டை உரிமங்களை தற்காலிகமாக முடக்குவதற்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு முடக்கப்பட்ட அட்டைகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர பயனாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய அரசு அதிகாரிகள் தரப்பில், ‘உண்மையான பயனாளிகள் தங்களின் குடும்ப அட்டையை பாதுகாத்துக் கொள்ள உடனடியாக இ-கேஒய்சி பதிவை புதுப்பிக்க வேண்டும்.இல்லையென்றால் ரேஷன் அட்டைகள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏழை மக்களுக்கு புது நெருக்கடியைஉருவாக்கியுள்ளது.நாடு முழுவதும் சுமார் 1.58 கோடி பயனாளர்களின் அட்டைகள் முடக்கப்படும் என்று அறிவித்திருந்தாலும் கூட, எந்தெந்த மாநிலங்களில் எத்தனை அட்டைகள் முடக்கப்படும் என்பதனை ஒன்றிய அரசுதெரிவிக்கவில்லை.