தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘கரப்பான் பூச்சி’யைக் கண்டு மிரளும் பாஜக; இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என கூப்பாடு! 2 கோடி சமூக வலைதள கணக்குகளை முடக்க மோடி அரசு முயற்சி?

22 May 2026, 8:34 pm
‘கரப்பான் பூச்சி’யைக் கண்டு மிரளும் பாஜக; இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என கூப்பாடு! 2 கோடி சமூக வலைதள கணக்குகளை முடக்க மோடி அரசு முயற்சி?

‘கரப்பான் பூச்சி’யைக் கண்டு மிரளும் பாஜக; இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என கூப்பாடு! 2 கோடி சமூக வலைதள கணக்குகளை முடக்க மோடி அரசு முயற்சி?

புதுதில்லி, மே 22 - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்தின் கருத்தை விமர்சிக்கும் வகையில் தொடங்கப்பட்ட ‘கரப்பான் பூச்சி ஜனதா’ என்ற இணையதள கட்சி (காக்ரோச் ஜனதா கட்சி - cockroach janatha party)’ குறுகிய காலத்தில் பிரபலமாகியுள்ளது.

பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி களை பின்னுக்குத் தள்ளியுள்ள கரப் பான் பூச்சி கட்சியை சமூக வலைத் தளங்களில் பின்தொடருவோர் எண்ணி க்கை 2 கோடியை நெருங்கியுள்ளது.

அதே போல உறுப்பினர் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கும் அளவில் உள்ளது.

சமூக வலைத்தள பக்கங்களின் முடக்கம் உள்ளிட்ட மோடி அரசின் மிரட்டல் இருந்தாலும் கரப்பான் பூச்சி ஜனதாவின் மவுசு கொஞ்சம் கூட குறையவில்லை.

இந்நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பின் தொடரும் மற்றும் ஆதரவு சமூகவலைதளக் கணக்கு களை மோடி அரசு முடக்க திட்டமிட்டு ள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.

இந்தியாவின் இறையா ண்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வும், கரப்பான் பூச்சி கட்சியின் அனை த்து சமூக வலைதள கணக்குகளையும் உடனடியாக தடுக்க வேண்டும் என உளவுத்துறை ஒன்றிய பாஜக அர சுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பெயர் வெளியிட விரும்பாத உளவுத்துத்துறை அதிகாரி ஒருவர், “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளை ஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவது கவலையை ஏற்படுத்து கிறது.

இது சிக்கலை ஏற்படுத்தலாம்” என அச்சம் தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டின் இறை யாண்மை, பாதுகாப்பு, பொது ஒழுங்கு அல்லது குற்றங்களுக்குத் தூண்டுத லாக இருக்கும் தகவல்களைப் பொதுமக்கள் அணுகுவதைத் தடை செய்ய தகவல் தொழில்நுட்பச் சட்டத் தின் பிரிவு 69 (ஏ)-ஐ செயல்படுத்த மோடி அரசு தொடங்கியுள்ளது.

அரசியல் வர்ணனையாளராக இருக்கும் அபிஜித் தீப்கேவால் தொடங் கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி யின் கணக்குகள் மட்டுமின்றி, அந்த கணக்கை பின்தொடருபவர்கள், கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவாக பதி வுகளை வெளியிடுபவர்களின் சமூக வலைத்தள கணக்குகளையும் முடக்க மோடி அரசு முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

94 சதவிகித இந்தியர்களை பாகிஸ்தானியராக்கும் பாஜக கரப்பான் பூச்சி கட்சியின் மொத்த ஆதரவாளர்களில் இந்தியர்கள் ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே என்றும், 77% பேர் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வர்கள் என பாஜக ஆதரவு கோடி மீடியாக்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், இதனை அபிஜித் தீப்கே மறுத்துள்ளார்.

“எங்கள் கணக்கை ஹேக் செய்ய நீங்கள் தீவிரமாக முயற்சிப்பது எனக்குத் தெரியும், ஆனால் அதில் நீங்கள் தோல்வியடைந்து விட்டீர்கள்.

உண்மையான தரவுகளை நான் பகிர்கிறேன். 9

4 சதவிகித இந்திய இளைஞர்களை நீங்கள் ஏன் பாகிஸ் தானியர்கள் என்று கூறுகிறீர்கள்?” என்று தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் கேள்வி எழுப்பி, தனது தரப்பு புள்ளி விவரங்களையும் பகிர்ந்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.