முந்தய பக்கம்

அனைத்து மொபைல் போன்களில் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் - ஒன்றிய அரசு உத்தரவு

2 Dec 2025, 7:48 am
அனைத்து மொபைல் போன்களில் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் - ஒன்றிய அரசு உத்தரவு
<p>இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் &#39;சஞ்சார் சாத்தி&#39; செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என ஒன்றிய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.&nbsp;<br /> ஐ.எம்.இ.ஐ மோசடிகளை தடுக்கும் பெயரில், இந்தியாவில் தற்போது விற்பனைக்கு உள்ள மொபைல் போன்களிலும் சாஃப்ட்வேர் அப்டேட் மூலமாக 90 நாட்களுக்குள் &#39;சஞ்சார் சாத்தி&#39; செயலி இடம் பெற வேண்டும் எனவும், அதனை யாரும் un-install செய்யாத வகையில் இருக்க வேண்டும் எனவும் அனைத்து மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒன்றிய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.<br /> மேலும், அடுத்த 120 நாட்களுக்குள் இந்த பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த உத்தரவுக்கு, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த அறிவிப்புக்கு ஆப்பிள் நிறுவனமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram