பட்டியலின ஆராய்ச்சி மாணவர்களின் உதவித்தொகையை நிறுத்திய மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாணவர்கள் கடிதம்
40 minutes before

பட்டியலின ஆராய்ச்சி மாணவர்களின் உதவித்தொகையை நிறுத்திய மோடி அரசு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாணவர்கள் கடிதம்

புதுதில்லிநாடு முழுவதும் உள்ள பட்டியலின முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒன்றிய அரசு மாதாந்திர உதவித்தொகை வழங்கி வருகிறது. ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ்

செயல்படும் தேசிய பட்டியலினத்தவர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NSFDC), பல்கலைக்கழகங் கள்வழங்கிடும் அரையாண்டு தொடர்ச்சி சான்றிதழின் அடிப்படையிலும், டிபிடி(Direct Benefit Transfer - நேரடிப் பயன் பரிமாற்றம்) முறையிலும் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதிக்குள் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவுவைக்கும். முதல் 2 ஆண்டுகள் (ஜேஆர்எப்) - மாதம் ரூ. 37,000, அடுத்த 3 ஆண்டுகள் (எஸ்ஆர்எப்) - மாதம் ரூ. 42,000 என உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான பட்டியலின மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகை இன்னும் கிடைக்கவில்லை, நிறுத்திவைக்கப்பட்டுள் ளது என பட்டியலின ஆராய்ச்சி மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நவம்பர் 6ஆம் தேதி மாணவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், ”உதவித் தொகை என்பதுவெறும் மாதாந்திர உதவித்தொகை மட்டுமல்ல; பட்டியலின மாணவர்கள் எவ்வித நிதிப் பாதுகாப்பின்மையும் இன்றி, சுயமரியாதையுடன் உயர்கல்வி ஆராய்ச்சியைத் தொடர்வதை உறுதிசெய்யும் ஒரு அரசியல்சாசன மற்றும்சமூகப் பொறுப்பாகும். தேசிய பட்டியலினத்தவர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NSFDC) அமைப்பில் உள்ள உதவித்தொகைப் பிரிவை பல மாணவர்கள் தொடர்புகொண்டு கேட்டபோது, அமைச்சகம் நிதியை விடுவிக்கவில்லை என்று பதிலளிக்கப் பட்டுள்ளது. இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. அதனால் உதவித்தொகையை உடனடியாகவும் சீராகவும் வழங்குவதை உறுதிசெய்ய அவசரத் தலையீடு வேண் டும்” என அக்கடிதத்தில் கூறப்பட் டுள்ளது.

செப்டம்பர் மாத உதவித் தொகை கிடைக்கவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அக்டோபர் மாதத்திற் கான உதவித்தொகை வழங்கப் பட்டது தொடர்பாக இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.