தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பட்ஜெட்டில் ரூ. 7,000 கோடி குறைப்பு; ரூ. 30,000 கோடியை செலவிடவில்லை பட்டியல் வகுப்பினருக்கு மோடி அரசு அப்பட்டமான துரோகம்!

8 Aug 2026, 9:55 pm
பட்ஜெட்டில் ரூ. 7,000 கோடி குறைப்பு; ரூ. 30,000 கோடியை செலவிடவில்லை பட்டியல் வகுப்பினருக்கு மோடி அரசு அப்பட்டமான துரோகம்!

பட்ஜெட்டில் ரூ. 7,000 கோடி குறைப்பு; ரூ. 30,000 கோடியை செலவிடவில்லை பட்டியல் வகுப்பினருக்கு மோடி அரசு அப்பட்டமான துரோகம்!

புதுதில்லி, ஆக. 8 -ஒன்றிய அரசின் பட்ஜெட்டில், பட்டியல் வகுப்பினருக்கான நிதி ஒதுக்கீட்டை சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி வரை குறைத்தும், ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 30 ஆயிரம் கோடியை செலவிடாமல், நரேந்திரமோடி அரசு பெரும் வஞ்சகத்தையும் துரோகத்தையும் இழைத்திருப்பதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அம்பலப்படுத்தியுள்ளார்.

“பட்டியல் வகுப்பினருக்கான திட்டங்களுக்கு 2025-26ஆம் ஆண்டின் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு எவ்வளவு? பட்டியல் வகுப்பினருக்கான துணைத் திட்டத்தின் நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா? அதன் அமலாக்கம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது? ஒதுக்கப்பட்ட நிதியில் 2025-26-இல் எவ்வளவுசெலவிடப்பட்டுள்ளது?” - என்ற கேள்விகளை சு. வெங்கடேசன் எம்.பி. நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்தார்.

அமைச்சர் அளித்த புள்ளி விவரம்!

இதற்கு சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பதிலளித்துள்ளார்.அதில், “2025-26 நிதியாண்டில் பட்டியல் வகுப்பினருக்கான மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட அமைச்சகங்களுக்கான மொத்த திட்ட ஒதுக்கீடான 11,61,830 கோடிகளில், 14.5 சதவிகிதம், அதாவது 1,68,482 கோடிகள், பட்டியல் வகுப்பு மக்களின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, 38 அமைச்சகங்களின் 239 திட்டங்களுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; இதை கண்காணிக்கிற பொறுப்பை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வகிக்கிறது; இதற்கான ஆய்வு கூட்டங்கள் 29.04.2025 அன்று அமைச்சர் தலைமையிலும், 25.08.2025 மற்றும் 16.04.2026 தேதிகளில் துறைச் செயலாளர் தலைமையிலும் நடத்தப்பட்டுள்ளன; 2025-26 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடு 1,61,201.98 கோடிகள் ஆகும்; 38 அமைச்சகங்கள் தந்திருக்கிற தகவல்களின்படி செலவிடப்பட்டுள்ள தொகை 1,38,068.85 கோடிகள் ஆகும்!” என்று தெரிவித்துஉள்ளார்.

நிதி ஒதுக்கீடு - செலவில் ஏமாற்று!

இந்த புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் சு. வெங்கடேசன் எம்.பி. ஒன்றிய பாஜக அரசானது, பட்டியல் வகுப்பு மக்களை ஏமாற்றியிருப்பதாகவும், துரோகம் இழைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.“எஸ்சி - எஸ்டி துணை திட்டங்களுக்கான ஒதுக்கீடும் செலவினமும் எப்போதுமே அத்திட்டங்களுக்கான நெறிமுறைகளின் அடிப்படையில் அமைவதில்லை. அமைச்சர் தந்துள்ள பதிலும் அதையே நிரூபிக்கிறது.

மீறப்படும் துணைத்திட்ட நெறிமுறைகள்!

ஒதுக்கீடு 14.5 சதவிகிதம் என்று தெரிவித்திருக்கும் அமைச்சர் மொத்த திட்டச் செலவு என்று கூறாமல்,எந்தெந்தஅமைச்சகங்களுக்கு பட்டியல் வகுப்பினர் மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதோ அந்த அமைச்சகங்களின் மொத்த திட்டச் செலவில் இத்தனை சதவிகிதம் என்றுகுறிப்பிட்டிருக்கிறார். ஆகவே, ஒட்டுமொத்த திட்டச் செலவினத்தில் அமைச்சர் குறிப்பிட்டு இருக்கிற சதவிகிதத்தை விட குறைவானதாகவே நிதி ஒதுக்கீடு இருக்கும் என்பதில் ஐயமில்லை. இது துணைத்திட்ட நெறிமுறைகளுக்கு விரோதமானதாகும்!” என்று சு. வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.

சிறப்புச் சட்டத்தின் தேவை வலுக்கிறது!

“பட்ஜெட் ஒதுக்கீடுக்கும் திருத்தப்பட்ட மதிப்பீடுக்கும் இடையிலான வித்தியாசம் 7200 கோடிகள். பட்ஜெட் ஒதுக்கீடுக்கும், உண்மையில் செலவிடப்பட்டு இருப்பதாக அமைச்சகங்கள் தெரிவித்திருப்பதற்கும் இடையிலான வித்தியாசம் 30,400 கோடிகள்” என்பது அதிர்ச்சியை தருவதாக குறிப்பிட்டிருக்கும் சு. வெங்கடேசன் எம்.பி.,“துணைத் திட்டங்கள் அமலாவதை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய சிறப்புச் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்ற இடதுசாரி, சமூகநீதி, தலித் அமைப்புகளின் நீண்டகாலகோரிக்கையின் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

50 ஆண்டு ஆகியும் போராடும் நிலைதானா?

“வளர்ச்சி இடைவெளிகளை சரி செய்வதற்காக 50 ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகம் செய்யப்பட்ட துணைத்திட்டங்களின் நெறிமுறைகள், இன்றும் கூட கடைப்பிடிக்கப்படவில்லை என்று சொன்னால் எவ்வாறு வளர்ச்சி இடைவெளிகள் சரி செய்யப்படும் என்கிற கேள்வி எழுகிறது” எனவும் சு. வெங்கடேசன் எம்.பி. வேதனை தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.