தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேசத்தின் சேமிப்பைச் சூறையாடும் மோடி அரசு

24 May 2026, 10:36 pm
தேசத்தின் சேமிப்பைச் சூறையாடும் மோடி அரசு

தேசத்தின் சேமிப்பைச் சூறையாடும் மோடி அரசு

ஒன்றிய பாஜக அரசு தனது மோசமான நிதி நிர்வாகத் தோல்விகளை மூடிமறைக்க, நாட்டின் மிக முக்கியப் பொதுத்துறை நிறுவனங்களின் நிதி ஆதாரங்களைச் சுரண்டுவதையே தனது வழக்கமான வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

அதன் புதிய உச்சமாக, 2025-26 நிதி யாண்டிற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI), இதுவரை இல்லாத அளவாக 2.87 லட்சம் கோடி ரூபாயை ஒன்றிய அரசுக்கு உபரிப் பணமாக மாற்ற முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு மாற்றப்பட்ட 2.69 லட்சம் கோடி ரூபாயை விட இது 7 சதவீதம் அதிகமாகும். இந்த இமாலயத் தொகை மாற்றமானது ஏதோ நாட்டின் பொரு ளாதார வளர்ச்சியால் வந்தது அல்ல; மாறாக, அவசரக் காலப் பாதுகாப்பிற்காக ரிசர்வ் வங்கி வைத்திருக்க வேண்டிய நிதியைச் சட்டப் பூர்வமாகக் குறைத்து, ஒன்றிய அரசுக்கு மடை மாற்றியதன் விளைவே ஆகும்.

எளிய வாசகர்களுக்குப் புரியும் வகையில் சொல்வதானால், ரிசர்வ் வங்கி என்பது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் தாங்கிப் பிடிக்கும் ஒரு பெரும் தூணாகும். எதிர்காலத்தில் நாட்டில் ஏதேனும் கடுமையான நிதி நெருக்கடியோ அல்லது உலகளாவிய பொருளா தாரச் சரிவோ ஏற்பட்டால், அதிலிருந்து தேசத்தைப் பாதுகாக்க ரிசர்வ் வங்கி தன்னிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை அவசரக்கால இருப்பு நிதியாக (Contingent Risk Buffer) வைத்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு வரை இந்த இருப்பு நிதியின் அளவு 7.5 சதவீதமாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால், மோடி அரசு தனது கூட்டுக் களவாணி நண்பர்களுக்கு திட்டங்கள் வாயிலாக தாரை வார்க்கவும், நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் ரிசர்வ் வங்கிக்குக் கடுமையான அழுத்தம் கொடுத்து, அந்தப் பாதுகாப்பு வளையத்தை 6.5 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது, ஒரு குடும்பம் தங்களின் அவசரக்கால மருத்துவச் சேமிப்பைத் தற்போதைய வீண் செலவுக்காகக் காலி செய்வதற்கு ஒப்பானதாகும்.

மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 95 டாலராக எகிறிக் கிடக்கிறது. இதனால் இந்தியாவின் மானியச் செலவுகள் அதிகரித்துள்ளன, அதேசமயம் வருவாய் எதிர்பார்த்தபடி இல்லை. கார்ப்பரேட் முதலாளி களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் வரிச் சலுகைகளை அள்ளி வீசும் இந்த அரசு, அத னால் ஏற்படும் பற்றாக்குறையை ரிசர்வ் வங்கியின் சேமிப்பைக் கொண்டு ஈடுகட்ட முயல்கிறது. இந்தத் தற்காலிகப் பண வரவைக் காட்டி நிதிப்பற்றாக்குறை இலக்குகளை எட்டி விட்டதாக மோடி அரசு தம்பட்டம் அடிப்பது அப்பட்டமான ஏமாற்று வேலை ஆகும். நாட்டின் பொருளாதார அடித்தளத்தையே பல வீனப்படுத்தும் இந்த ஆபத்தான போக்கினை, ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியைச் சிதைக்கும் எதேச்சதிகார மோடி அரசின் மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளை முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து வீரியத்துடன் அம்பலப்படுத்த வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.