தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரேசன் அரிசிக்கும் மோடி அரசால் வந்தது ஆபத்து போராட்டத்திற்கு சிஐடியு, வி.ச., வி.தொ.ச., மாதர் சங்கம் அறைகூவல்!

10 Jul 2026, 8:30 pm
ரேசன் அரிசிக்கும் மோடி அரசால் வந்தது ஆபத்து போராட்டத்திற்கு சிஐடியு, வி.ச.,  வி.தொ.ச., மாதர் சங்கம் அறைகூவல்!

ரேசன் அரிசிக்கும் மோடி அரசால் வந்தது ஆபத்து போராட்டத்திற்கு சிஐடியு, வி.ச., வி.தொ.ச., மாதர் சங்கம் அறைகூவல்!

சென்னை, ஜூலை 10 - ஏழைகளுக்கு ரேசனில் வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியை, 7 கிலோவாக குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஒன்றிய பாஜக அரசின் சதித் திட்டத்திற்கு எதி ராக, வலுவான போராட்டத் தை நடத்துவோம் என்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), அகில இந்திய விவ சாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம், அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய நான்கு அமைப்புக் கள் கூட்டாக அறைகூவல் விடு த்துள்ளன. இதுதொடர்பாக, இவ்வமைப்புகளின் மாநிலப் பொதுச்செயலாளர்கள் எஸ். கண்ணன் (சிஐடியு), சாமி. நடராஜன் (அ.இ.வி.ச.), வீ. அமிர்தலிங்கம் (அ.இ.வி.தொ.ச.), அ. ராதிகா (அ.இ.ஜ. மா.ச.) ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஏழை மக்களைப் பாதிக்கும் நடவடிக்கை!

தேசிய உணவுப் பாது காப்புச் சட்டத்தின்படி, குடும்பம் ஒன்றுக்கு தற்போது 35 கிலோ அரிசி ரேசன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதை மோடி தலைமையிலான பாஜக அரசு நபர் ஒருவருக்கு 7 கிலோ என குறைத்தும், அதிகபட்சம் 35 கிலோ என்று மாற்றியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஒரு குடும்பத் திற்கு 35 கிலோ கிடைத்து வந்த அரிசியின் அளவு குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை காரணமாக குறைக்கப்படும். மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற முறையால் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட ஏழைக் குடும்பங்கள் பெரும் துயரத்தை எதிர்கொள்வர். வறுமையில் வாடும் உழைப் பாளி மக்களின் பட்டினி அதி கமாகும். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

கடிதம் அனுப்பி எதிர்ப்பை பதிவு செய்வோம்!

மேற்படி நடவடிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், ரேசன் விநியோகத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்போதைய மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் வரம்பை மாற்றியமைக்க வேண்டும் என்றும் ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துகிறோம். ஜூலை 13-க்குள் மேற்படி சட்டத் திருத்தத்தின் வரைவு அறிவிப்பின் மீது கருத்துக் களை தெரிவிக்க ஒன்றிய அரசு கூறியுள்ளது. எனவே, சிஐடியு, அகில இந்திய விவ சாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்கள் ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலம் மேற்படி திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்துவது என்று முடிவுசெய்துள்ளோம். ஊராட்சி ஒன்றியங்கள் அளவில் ஆர்ப்பாட்டம்! இந்த அறைகூவலை ஏற்று, அனைத்து பொது மக்களும், உணவுப் பாது காப்புச் சட்டத்தைப் பாதுகாக்க, வாழும் உரிமையை பாது காக்க, ஒன்றிய பாஜக அர சுக்கு கடிதம் எழுத வேண்டு கிறோம். மேலும் நான்கு அமைப்புகள் சார்பில் ஒன்றிய தலைநகரங்களில் ஆர்ப் பாட்ட போராட்டம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி Hon`ble Minister, National Food and Public Distribution, Krishi Bhawan, Dr.Rajendra Prasad road, New Deihi – 100 001. E.Mail. agrimin.india@gmail.com, secy_food@gmail.in

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.